நடிகர் சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

Share

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி நடிகர் சிம்பு அதனை விமர்சித்து பாடலொன்றைப் பாடியிருந்தார். அதில் ஜி.எஸ்.டி. குறித்தும் விமர்சனமிருந்தது.

கபிலன் வைரமுத்து எழுதியிருந்த அந்தப்பாடல் ’தட்றோம்.. தூக்குறோம்’ என்ற படத்திற்காக இயற்றப்பட்டது.

பாடலைப் பாடியதற்காக சிம்புவிற்கு பாரதிய ஜனதா தொண்டர்கள் சார்பில் கண்டனங்கள் எழுப்பப்படுவதால் சென்னை தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

Share
The short URL of the present article is: http://seythigal.in/zB2yX
Updated: November 11, 2017 — 1:52 pm
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme