ஜனவரி 6 : மலேஷியா நட்சத்திரக் கலை விழா – சூப்பர் ஸ்டார் கலந்து கொள்கிறார்

Share

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் ஜனவரி 6-ம் தேதி (சனிக்கிழமை) மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் நட்சத்திரக் கலை விழா நடைபெற உள்ளது.

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கான நிதி திரட்டுவதற்கான நிகழ்ச்சி இது. கூடவே நட்சத்திர கிரிக்கெட்டும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

மலேஷிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அந்த நாட்டின் பிரதமர் நஜீப் ரசாக் விழாவில் கலந்து கொள்ள சம்மதித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் இந்தக் கலை விழாவில் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
The short URL of the present article is: http://seythigal.in/aJ7mh
Updated: November 11, 2017 — 6:22 pm
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme