Month: October 2017

இன்றைய செய்திகள் : அக்டோபர் 31, 2017

Share

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: 15 பேருக்கு நோட்டீஸ் உலகம் சவூதி அரேபியாவில் விளையாட்டு அரங்குகளில் பெண்கள் தனித்து வர அனுமதிக்கப்படுவர் என்று அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்தார்.

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 30, 2017

Share

எத்தனை சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டாலும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு நனவாகாது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார். ஆதார் கோரி விண்ணப்பிக்கும் மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காக புதிய நடைமுறையைக் கொண்டுவரப் போவதாக இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது. உலகம் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கொலைப் பட்டியலில் பிரிட்டனின் குட்டி இளவரசர் ஜார்ஜ் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share

ஆர்.கே. நகரில் இந்த ஆண்டே இடைத் தேர்தல்.

Share

ஆர்.கே. நகரில் இந்த ஆண்டே இடைத் தேர்தல். சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஏகே ஜோதி ஆர் கே நகர் இடைத்தேர்தல் குறித்து உறுதி அளித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர் கே நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. முன்னதாக பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர் கே நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 10, 2017

Share

தமிழக அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ்: முதல்வர் பழனிசாமி உத்தரவு உலகம் அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார மேதை ரிச்சர்ட் தேலருக்கு, இந்த ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 09, 2017

Share

மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 10,332 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் எந்தவொரு பாதுகாப்பு சவாலுக்கும் தக்க பதிலடி கொடுப்பதற்கும், உடனடியாகப் போர் தொடுப்பதற்கும் இந்திய விமானப் படை தயார் நிலையில் உள்ளது என்று அதன் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவா கூறினார். உலகம் ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் அதானி சுரங்கத் தொழில் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் ஆஸ்திரேலியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 07, 2017

Share

கோவையில் அமைக்கப்பட்டு வரும் காவலர் அருங்காட்சியகத்தில் விமானப் படையில் பயன்படுத்தப்படும் மிக் 21 ரக போர் விமானம் இடம் பெற இருப்பதாக  மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், கடப்பாவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர். உலகம் அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதற்காகப் போராடி வரும் தன்னார்வ அமைப்பான ஐ.சி.ஏ.என்.னுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிப்பதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 06, 2017

Share

மதுரை  அரசு மருத்துவமனையில் டெங்கு அறிகுறிகளுடன் 249  பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தில்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் (என்சிஆர்) பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரிய மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. உலகம் வட கொரியா மீது ஐ.நா. கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு ரகசிய இணையதள வசதியை ரஷியா அளித்து வருவது தெரிய வந்துள்ளது.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme