Month: September 2017

சினிமா கேளிக்கை வரிக் குறைப்பு

Share

சினிமா கேளிக்கை வரிக் குறைப்பு தமிழகத்தில் சினிமா கேளிக்கை வரி 30%-லிருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிற மொழிப்படங்களுக்கு 20%. இதைத் தவிர ஜிஎஸ்டி உண்டு.

Share

தேமுதிக துணைப் பொதுச்செயலாளராக சுதீஷ் நியமனம்

Share

தேமுதிக துணைப் பொதுச்செயலாளராக சுதீஷ் நியமனம் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக விஜயகாந்தின் மனைவியின் சகோதரரான சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்

Share

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அஸ்ஸாம் மாநில ஆளுநராக இருப்பவர். மேகாலயா மாநிலத்தில் ஆளுநராக கூடுதல் பொறுப்பில் உள்ளார். அகில இந்திய ஃபார்வேர்டு ப்ளாக்கிலும், பிறகு இந்திரா காங்கிரஸிலும் இருந்த அவர் கடந்த 1991-ம் ஆண்டு ராமஜன்ம பூமி யாத்திரையின் போது பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

Share

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 30, 2017

Share

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியில் பழு தூக்கும் பிரிவில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை நிவேதா 8 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார். ‘விழித்திரு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்ததால் மேடையில் நடிகை தன்ஷிகா கண்டித்து பேசியதற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகம் இந்திய அமெரிக்க நல்லுறவை மேம்படுத்தும் விதமாக அமெரிக்காவிடமிருந்து  2 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளதாக தகவல் […]

Share

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 29, 2017

Share

ரயில் நிலையங்களில் நடைமேடை, பேட்டரி கார் கட்டணங்கள் குறைக்கப்படும் தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார். காரைக்குடியில் செப்டம்பர் 30-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ள தேமுதிக பொதுக்குழுவுக்கு செல்போன், கேமிரா எடுத்து வரஅனுமதி இல்லை உலகம் வடகொரியாவில் போர் பதற்றம் நிலவி வருவதால் மலேசியாவை சேர்ந்த குடிமக்கள் வடகொரியாவிற்கு செல்வதற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது.

Share

ரத்தம் தேவை : கொடையாளர்களுடன் இணைக்கிறது பேஸ்புக்

Share

ரத்தம் தேவை : கொடையாளர்களுடன் இணைக்கிறது பேஸ்புக் ரத்த கொடையாளர்களை ரத்த வங்கிகள், ரத்தம் தேவைப்படும் மக்கள், மருத்துவமனைகளுடன் இணைக்கும் புதிய வசதியை சமூக வலைதளமான பேஸ்புக் அறிமுகப்படுத்த உள்ளது. பயனர்களிடம் இருந்து ரத்தப் பிரிவு, முன்னர் ரத்த தானம் செய்தவர்களா உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பெறப்படும். தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்படும். அதே நேரத்தில் பதிவு செய்துள்ள கொடையாளர்கள் தாங்கள் எப்போது ரத்த தானம் செய்ய முடியும் என்பன குறித்த விவரங்களைத் தங்கள் டைம்லைனில் அக்டோபர் […]

Share

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 28, 2017

Share

மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்படக் கூடும் என்பதால் ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவதை ஜெயலலிதா எதிர்த்ததாக வேலூர் எம்.பி. பி.செங்குட்டுவன் கூறினார். பண்டிகை நாள்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (செப்.29) முதல் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை நாள்களாகும். உலகம் தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு 5 ஆண்டு சிறை

Share

இன்றைய செய்திகள் : செப்டம்பர் 27, 2017

Share

தஞ்சாவூர் அருகே மோட்டார் சைக்கிளில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டி வந்ததாகக் கூறி அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார். சூரிய ஒளியில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்காக தமிழக அரசு நான்கு நிறுவனங்களுடன் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. உலகம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டும் சக்திகள் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Share

கருணாநிதி நலமுடன் உள்ளார்

Share

கருணாநிதி நலமுடன் உள்ளார் திமுக தலைவர் மு. கருணாநிதி நலமுடன் உள்ளார். அவர் உடல்நலன் பற்றிக் கிளப்பி விடப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்டோர் இன்று கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்தித்தனர்.

Share

திருப்பதி டிசம்பர் மாத ஸ்பெஷல் தரிசன டிக்கெட் விற்பனை ஆரம்பம்

Share

திருப்பதி டிசம்பர் மாத ஸ்பெஷல் தரிசன டிக்கெட் விற்பனை ஆரம்பம் திருமலை – திருப்பதி தேவஸ்தான இணைய தளத்திலும், விற்பனையகங்களிலும் டிசம்பர் மாதத்திற்கான ஸ்பெஷல் உள்நுழைவு டிக்கெட் முன்பதிவுகள் இன்று துவங்கப்பட்டுள்ளன. இணைய தள முகவரி : ttdsevaonline.com

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme