Month: July 2017

இன்றைய செய்திகள் : ஜூலை 31, 2017

Share

திருச்சி – நாகை -வேளாங்கண்ணி இடையிலான 156 கி. மீ. தொலைவு ரயில் பாதை விரைவில் மின்மயம் வரத்து அதிகரித்ததால் சென்னையில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் உள்பட சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு விவகாரத்தில் காணாமல் போன கோப்புகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தரும்படி, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற பொது கணக்குக் குழு (பிஏசி) உத்தரவிட்டுள்ளது. உலகம் ரஷியாவில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற அதிபர் விளாடிமீர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

Share

இன்றைய செய்திகள் : ஜூலை 30, 2017

Share

விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதையடுத்து, அவற்றால் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில் தீயணைப்புத் துறையில் 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதால் தீயணைப்பு வீரர்கள் பணிச்சுமையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உலகம் தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள பயங்கரவாதத்தை உலக நாடுகள் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Share

இன்றைய செய்திகள் : ஜூலை 29, 2017

Share

காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று நாட்களில் நான்கு அடி உயர்ந்துள்ளது. வரதட்சிணை கொடுமை தொடர்பான புகார்களை முழுமையாக விசாரித்து அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் வரை அதில் சம்பந்தப்பட்ட எவரையும் கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகம் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

Share

சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Share

கடந்த ஏப்ரல் மாதம் 28-ல் சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் குறித்து ஆராய குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த குழு ஆய்வு நடத்தி, நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றலாம். இந்த மரங்களால் பாதிப்பு ஏற்படுகிறது என பரிந்துரை செய்தது. இதனையடுத்து, முன்னர் பிறப்பித்த தடையை நீக்கி, நீர்நிலைகளில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை வெட்ட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Share

இன்றைய செய்திகள் : ஜூலை 28, 2017

Share

தமிழகத்தில் 11 இடங்களிலும் புதுச்சேரியில் 2 இடங்களிலும் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றிய மாற்றுத் திறனாளிகள் தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை புத்தக திருவிழாவில் இதுவரை 2 லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தமிழ் நூல் வெளியீடு மற்றும் தமிழ் நூல் விற்பனையாளர்கள் குழுமத்தின் அறங்காவலர் சண்முகம் கூறினார். உலகம் கேம்பிரிட்ஜ் விமான நிலையத்தில் மீட்பு விமானியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவு நேரப் […]

Share

விருது கமிட்டியில் சேவாக், பி.டி. உஷா சேர்ப்பு

Share

கேல் ரத்னா, அர்ஜூனா விருது கமிட்டியில் 12 பேர் கொண்ட உறுப்பினர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Share

இன்றைய செய்திகள் : ஜூலை 27, 2017

Share

ரஜினியும், கமலும் சேர்ந்தே அரசியலுக்கு வருவார்கள் என்று இமயமலை சண்முகானந்தா சுவாமிகள் தெரிவித்துள்ளார். ராமேசுவரத்தில் இன்று அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழா: பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். பாஜக ஆதரவுடன் நிதீஷ் குமார் மீண்டும் பிகார் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இதன் மூலம் பிகாரில் மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. உலகம் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தும் விதமாக, வரும் 2040-ம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கார்களையும் வேன்களையும் […]

Share

ஜூலை 26, 27: வெளியூர் மக்கள் ராமேஸ்வரம் வரவேண்டாம் : காவல்துறை

Share

ராமேஸ்வரம் பேக்கரும்பில் வரும் 27-ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருப்பதாலும், ஆடித் திருவிழாவுக்காக ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில் நடை சாத்தப்பட இருப்பதாலும் வெளியூர் மக்கள் ஜூலை 26, 27 ஆகிய தினங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாலை மார்க்கமாக ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி செல்வதையும், ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை […]

Share

இன்றைய செய்திகள் : ஜூலை 26, 2017

Share

ஆண்டாள் திருக்கோவில் தேரோட்டத்தையொட்டி  ஜூலை 27-ல் விருதுநகர் மாவட்டத்தில்  உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி அரசுப் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 12 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமான வெயில் பதிவானது. அதிகபட்சமாக மதுரையில் 107 டிகிரி வெயில் பதிவானது. உலகம் ஜெருசலேம் புனிதத் தலம் அருகே அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சோதனை வளைவுகளை நீக்க இஸ்ரேல் அரசு முடிவு செய்தது.

Share

இன்றைய செய்திகள் : ஜூலை 25, 2017

Share

பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வன்முறையில்லாத சமுதாயமே நாட்டின் பலம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். உலகம் சிக்கிம் எல்லையில் உள்ள டோகலாம் பகுதியில் நிறுத்தியிருக்கும் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சீனா நிபந்தனை விதித்துள்ளது

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme