Month: June 2017

இன்றைய செய்திகள் : ஜூன் 30, 2017

Share

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தொடக்க விழா மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. பசு காவலர்களுக்கு மோடி எச்சரிக்கை: பசு பக்தி என்ற பெயரில் மக்களைக் கொல்வதை ஏற்க முடியாது குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உலகம் இந்திய எல்லை அருகே தனது புதிய இலகு ரக பீரங்கியை வெடித்து சோதனை செய்ததாக சீனா தெரிவித்துள்ளது

Share

இன்றைய செய்திகள் : ஜூன் 29, 2017

Share

ரயில் கட்டண உயர்வு ஆகஸ்ட் முதல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி வியாழக்கிழமை (ஜூன் 29) அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. உலகம் சீனக் கடற்படை, 10 ஆயிரம் டன்கள் எடையைத் தாங்கும் வகையிலான அதிநவீன போர்க்கப்பலை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

Share

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் : மத்திய அரசு

Share

ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்வோர் ஆதார் எண்ணை அவசியம் இணைக்க வேண்டும். இதற்காக வருமான வரி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Share

இன்றைய செய்திகள் : ஜூன் 28, 2017

Share

வால்பாறை வட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாமிரவருணியில் இருந்து குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கத் தடை கோரும் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவை புதன்கிழமை கூடுகிறது. உலகம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் வலியுறுத்தியுள்ளனர்.

Share

இன்றைய செய்திகள் : ஜூன் 27, 2017

Share

சேலத்தில் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியிடம் வழிப்பறி செய்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு நெசவுத் தொழிற்கூடங்கள் மூடல் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) முதல் தொடங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடு பதிக்கப்பட்டு புதிதாக நிறுவப்பட்ட கொடி மரத்தில் ஏற்பட்ட சேதம் சரிசெய்யப்பட்டு, மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. உலகம் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டால் இரு நாடுகள் மட்டுமல்லாது உலகமே பயன்பெறும் […]

Share

இன்றைய செய்திகள் : ஜூன் 26, 2017

Share

மாமல்லபுரம் ஓட்டல்கள், விடுதிகளில் தங்க வருவோரிடம் ஆதார் அட்டை பெற்ற பிறகே அறை வழங்க வேண்டும் என மாமல்லபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் வெப்பச் சலனத்தின் காரணமாக பரவலாக மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்தது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் மட்டும் 100 டிகிரி வெயில் பதிவானது. கோவை கங்கா மருத்துவமனை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏர் ஆம்புலன்ஸ் சேவையை விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவா தொடக்கி வைத்தார். அமைச்சராக இருந்த போது ஒதுக்கப்பட்ட […]

Share

இன்றைய செய்திகள் : ஜூன் 25, 2017

Share

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் நிகழாண்டில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் ரூ.34,020 கோடி விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதாக அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவித்தார். அஸ்ஸாம் மாநிலத்தில் நேரிட்டுள்ள மழை வெள்ளத்தினால் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் கனடா உச்ச நீதிமன்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்விந்தர் ஷெர்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் : இன்று துவக்கம்

Share

இங்கிலாந்து மற்றும் வேல்சில் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி இன்று துவங்குகிறது. இதில் ஆறு முறை கோப்பை வென்ற ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று இங்கிலாந்தை சந்திக்கிறது. பின், வெஸ்ட் இண்டீஸ் (ஜூன் 29), பாகிஸ்தான் (ஜூலை 2), இலங்கை (ஜூலை 6), தென் ஆப்ரிக்கா (ஜூலை 8), ஆஸ்திரேலியா (ஜூலை […]

Share

இன்றைய செய்திகள் : ஜூன் 24, 2017

Share

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின்போது ஸ்ரீவாரி சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் குழுக்களாக விண்ணப்பிக்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் பஞ்சாப் மாணவர் நவ்தீப் சிங் 99.99 சதவீத மதிப்பெண்களுடன் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார். கீழடியில் அருங்காட்சியகம் அமைக்குமாறு மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. உலகம் யேமனில் அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தளபதி பலியானார்.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme