Month: May 2017

இன்றைய செய்திகள் : மே 31, 2017

Share

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று திடீரென ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுப் பதிவு உலகம் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம்: இந்தியா-ஜெர்மனி உறுதி

Share

குடிநீர் (கேன்) உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்

Share

குடிநீர் கேன் மீது விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த குடிநீர் (கேன்) உரிமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக முதல்வர் மற்றும் நிதியமைச்சர் உறுதி அளித்ததால் போராட்டம் இன்று திரும்பப்பெறப்பட்டது.

Share

இன்றைய செய்திகள் : மே 30, 2017

Share

இணையதள மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து விற்பனையாளர்கள் செவ்வாய்க்கிழமை (மே 30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வங்கக் கடலில் உருவான மோரா புயல் வங்கதேசத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள், வராதவர்களுக்காக வரும் ஜூன் 28-ஆம் தேதி முதல் சிறப்புத் துணைப் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட்டுக்கு மத்திய […]

Share

இன்றைய செய்திகள் : மே 29, 2017

Share

சென்னை, எண்ணூர், கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் ஏழுமலையானைத் தரிசிக்க 20 மணி நேரம் ஆகிறது. ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளுக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை செல்கிறார். உலகம் இலங்கையில் பெய்த தொடர் கனமழை, நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 146-ஆக அதிகரித்துள்ளது.

Share

இன்றைய செய்திகள் : மே 28, 2017

Share

தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய இரு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு உத்தரவு அமல் உலகம் இலங்கையில் பலத்த மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 119-ஆக அதிகரித்தது. மேலும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடு உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

Share

இன்றைய செய்திகள் : மே 27, 2017

Share

அனைவருக்கும் வீடு திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் விரைவில் புதிய வாடகை ஒப்பந்தச் சட்டம் அமலுக்கு வரவுள்ளது. ஊழல்வாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட கருப்புப் பணம் ஏழைகளுக்கு செலவிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார். காளஹஸ்தி கோயிலில் கடந்த 10 நாள்களில் 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உலகம் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமுல் தாப்பர் (48) நியமிக்கப்பட்டதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் அவை […]

Share

மே 28 : சி.பி.எஸ்.இ., 12-ம் வகுப்பு தேர்வு முடிவு

Share

வரும் 28-ம் தேதி சி.பி.எஸ்.இ., பள்ளியின் பிளஸ் 2 வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் cbse.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

Share

இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் விற்பதற்கு நாடு முழுவதும் தடை

Share

விவசாயத்திற்கும், வளர்ப்பதற்கும் அல்லாமல் இறைச்சிக்காக மாடு, ஒட்டகம் விற்பதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிருகவதை தடுப்புச் சட்டத்தில் இதற்கான திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Share

ஜூன் 7 : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

Share

வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் 1-க்கு பதில் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். அடுத்த ஒரு வாரத்தில் பஸ்பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme