Month: April 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

Share

தமிழக அரசு ஊழியர்களுக்கு, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

Share

2ஜி அலைக்கற்றை வழக்கு: ஜூலை 15ல் தீர்ப்பு

Share

2011-ஆம் ஆண்டு முதல் தில்லி சிபிஜ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஜ, மத்திய அமலாக்கத் துறை ஆகியவை தொடுத்த வழக்கின் இறுதி வாதங்கள் முடிந்தது எனவே இந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜீலை மாதம் 15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

Share

டிடிவி தினகரன் கைது

Share

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனை தில்லி போலீஸார் கைது செய்தனர். சில வாரம் முன்பு தில்லியில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தில்லி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அதிமுக அம்மா அணிக்கு இரட்டை இலை சின்னம் பெற தினகரன் தன்னிடம் பணம் கொடுத்ததாக வாக்கு மூலம் அளித்தார். இதனைத்தொடர்ந்து […]

Share

இன்றைய செய்திகள் : ஏப்ரல் 25, 2017

Share

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விவசாயிகள் மீண்டும் போராட்டம் உதகை அத்திக்கலில் பூமிக்கடியில் இருந்து மீண்டும் புகை: பொதுமக்கள் அதிர்ச்சி சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்வு உலகம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இறுதிச் சுற்றில் மேக்ரான், மரீன் லெபென் போட்டி

Share

இன்றைய செய்திகள் : ஏப்ரல் 24, 2017

Share

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்த திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். கட்சி நலன் கருதி நிதியமைச்சர் பதவியை பன்னீர்செல்வத்துக்கு விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளதாக தமிழக நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார். உலகம் சீன ராணுவம் எப்போதும் போர் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும் என்று அதிபர் ஜீ ஜின்பிங் கூறியுள்ளார்.

Share

இன்றைய செய்திகள் : ஏப்ரல் 23, 2017

Share

தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 106 டிகிரியைத் தாண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பழவேற்காட்டில் புயல் எச்சரிக்கைக் கூண்டு அமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவ மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை இரவு தில்லி வந்தார். உலகம் ஒபாமா ஆட்சிக் காலத்தின் போது அமெரிக்க மருத்துவ சேவைப் படையின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்ட […]

Share

இன்றைய செய்திகள் : ஏப்ரல் 22, 2017

Share

12 இடங்களில் வெயில் சதம் : இன்று 7 மாவட்டங்களில் 104 டிகிரியைத் தாண்டும் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் தனது காரில் உள்ள சுழல் விளக்கை வெள்ளிக்கிழமை அகற்றினார். உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளின் வீடு தேடி, பெட்ரோல்-டீசலை விநியோகம் செய்வது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி […]

Share

திருப்பதியில் கடைக்குள் லாரி புகுந்ததில் 20 பேர் பலி

Share

ஆந்திராவில் திருப்பதி அருகே ஏர்பேடு என்ற இடத்தில் அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து அங்கு பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த பயணிகள் மீது மோதியது. தொடர்ந்து, சாலையோர கடைக்குள் புகுந்தது. இதில், பயணிகள் உட்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 20 பேர் காயமடைந்து திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Share

பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி

Share

இந்திய கடற்படை வங்க கடல் பகுதியில் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த சோதனையில் எதிர்பார்த்த முடிவு கிடைத்ததாக கடற்படை அதிகாரி ஒருவர் கூறினார்.

Share

இன்றைய செய்திகள் : ஏப்ரல் 21, 2017

Share

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஒளவையார் சிலை திறக்கப்படும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறினார். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நடத்தும் 2 நாள் கல்விக் கண்காட்சி: அனுமதி இலவசம் பிரதமர் மோடியின் உத்தரவையடுத்து, தனது காரில் இருந்த சிவப்பு சுழல் விளக்கினை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை அகற்றினார். வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உலகம் பதற்றம் நிலவும் நாடுகளில் […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme