இலங்கைத் தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவிற்க்கு செல்கிறார் சூப்பர் ஸ்டார்

Share

இலங்கை வவுனியாவின் சின்ன டம்பன் கிராமதில் புளியங்குளம் பகுதிகளில், லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகா பெயரில் உள்ள ஞானம் அறக்கட்டளை சார்பில் லைக்கா நிறுவனம் ரூ. 22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 150 வீடுகளை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கவுள்ளது. இந்த வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரியவர்களுக்கு வீடுகள் வழங்க உள்ளார். இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/SwjHJ
Updated: March 24, 2017 — 10:05 am
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme