Month: March 2017

ரிலையன்ஸ் ஜியோ : மேலும் 3 மாதங்களுக்கு இலவசம் தொடரும்

Share

ரிலையன்ஸ் ஜியோ இலவச ஆஃபர்கள் இன்றுடன் முடிவடைகிறது. ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் இன்றைக்குள் 99 ரூபாய்க்கு புக்கிங் செய்ய வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனை வரும் 15-ம் தேதி வரை நீட்டித்திருக்கிறார்கள். வரும் 15-ம் தேதிக்குள் 99 ரூபாய் ப்ரைம் மெம்பர்ஷிப்பில் இணைந்து மேலும் குறைந்தபட்சம் ரூ. 303 ரீசார்ஜ் செய்பவர்களுக்கு இப்போது கிடைத்து வரும் இலவசங்கள் அனைத்தும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். ஜூலை முதல் கட்டணச் சேவை ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Share

சூப்பர் ஸ்டாரைச் சந்தித்தார் மலேஷியப் பிரதமர்

Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இந்தியா வந்துள்ள மலேஷியப் பிரதமர் அப்துல் ரசாக் சந்தித்தார். மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டுள்ளது.

Share

இன்றைய செய்திகள் : மார்ச் 31, 2017

Share

மதுரை நகரில் ஏப்ரல் 1 முதல் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றால் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை: கூடுதல் ஐ.ஜி நடிகர் சங்க புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா: 2018-ல் திறப்பு உலகம் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தென் கொரியா அதிபர் பார்க் கியூன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

இன்றைய செய்திகள் : மார்ச் 30, 2017

Share

ஆளுங்கட்சிக்கு சாதகமான அதிகாரிகளை மாற்ற வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் திமுக மனு முருங்கைக்காய் விளைச்சல் அமோகமாக உள்ள நிலையில், அதன் விலை கிலோ ரூ. 5 என்ற அளவில் கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் மு.க.ஸ்டாலின் தங்கள் மீது பாய்வதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். உலகம் டிரம்ப்பின் அடுத்த அதிரடி: ஒபாமாவின் சுற்றுச்சூழல் திட்டங்கள் ரத்து

Share

சென்னை மெரினாவில் காவல்துறையினர் குவிப்பு

Share

சென்னை மெரினாவில் மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடக்கம் என்ற பேச்சு எழுந்ததைத் தொடர்ந்து அங்கே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். அதே போல வதந்தி பரப்புவோர் மீதும் நடவடிக்கை உண்டு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share

இன்றைய செய்திகள் : மார்ச் 29, 2017

Share

திருநெல்வேலி நகைக் கடையில் ரூ.9 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்தவர்களை 24 மணி நேரத்தில் பிடித்த போலீஸாருக்கு டி.ஜி.பி. பாராட்டு போராட்டத்தை கைவிட விவசாயிகள் மறுப்பு: குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்களை சந்தித்த பிறகு அறிவிப்பு மணல் குவாரிகளின் எண்ணிக்கை குறைவால் மணல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் ஃபுகுயி அணு மின் நிலையத்தை மீண்டும் இயக்கலாம்: ஜப்பான் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Share

லைகா நிறுவனம் வழக்கு

Share

தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் நியூஸ் 18 தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

Share

விளை நிலங்கள் விற்பனை – தடை நீடிப்பு

Share

விளை நிலங்களை விற்பனை செய்வதற்கான தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. அதே நேரத்தில் கடந்த வருடம் அக்டோபர் 23-ம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைகளை மறுபதிவு செய்து கொள்ளலாம் என்று நிபந்தனையில் தளர்வு செய்துள்ளது.

Share

இன்றைய செய்திகள் : மார்ச் 28, 2017

Share

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கலுக்காக பணம் செலுத்தியவர்கள் அப் பணத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி அரசு அனுமதிக்காது என மாநில வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் கூறினார். சென்னை: போலீஸார் மிரட்டியதால் தீக்குளித்த பெண் அரசு மருத்துவமனையில் இறந்தார். ஓபிஎஸ் அணி சின்னத்தை மாற்ற வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் புகார் 2-ஜி வழக்கு: வெளிநாடு செல்ல கேத்தான் தம்பதிக்கு அனுமதி மறுப்பு உலகம் 105 […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme