Month: February 2017

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 28, 2017

Share

சீமைக் கருவேல மரங்களை வளர்க்கத் தடை விதிக்கும் சட்டத்தை இரண்டு மாதங்களில் நிறைவேற்றுமாறு, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. கிழக்கு கடற்கரைச் சாலையில் கார் பந்தயம்: 10 இளைஞர்கள் கைது. விஜயவாடா அருகே சொகுசு பேருந்து கவிழ்ந்து 6 பேர் பலி. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கொள்கையின்படி, ரயில் பயணிகளுக்கு உணவுத் தயாரிக்கும் பணியினை இந்திய ரயில்வே உணவுக் கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) மீண்டும் கையில் எடுக்கவுள்ளது. உலகம் ஈரான் கடற்படைப் […]

Share

நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு

Share

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கால் மற்றும் டேட்டாவுக்கான ரோமிங் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் ரோமிங் கட்டணங்களை வழங்கவும் ஏர்டெல் முடிவு செய்துள்ளது.

Share

முதல்வர், சபாநாயகர் உள்ளிட்ட நால்வருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Share

தமிழக சட்டமன்றத்தில் நடந்த நமபிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதல்வர், சபாநாயகர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share

வீட்டுமனைகள் வழக்கு : கால அவகாசம் கோருகிறது அரசு

Share

அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் வழக்கில் கால அவகாசம் தேவை என்று தமிழக அரசின் வழக்கறிஞர் மீண்டும் கோரிக்கை. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் தமிழக அரசின் தெளிவான நிலைப்பட்டை கூறும்படி நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Share

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 27, 2017

Share

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் விரும்பாவிட்டால் மத்திய அரசு செயல்படுத்தாது என பாஜக தேசியச் செயலர் எச்.ராஜா தெரிவித்தார். காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டவரின் உடலை வாங்க, அவரது உறவினர்கள் 3ஆவது நாளாக மறுத்தனர். ரூபல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகம் அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தியாளர்களுடனான இரவு விருந்தில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Share

ஜெ. மரணம் குறித்து சர்ச்சைப் பேச்சு : மருத்துவர் (?!) சீதா கைது

Share

மறைந்த முதல்வர் ஜெ. மரணம் குறித்து பேசிய அப்போலோ மருத்துவர் என்று கூறப்பட்ட சீதா என்பவர் கைது. அப்போலோ நிர்வாகத்தின் புகாரின்பேரில் சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை. விசாரணையில் அவர் மருத்துவர் இல்லை என்று தெரியவந்துள்ளதாகத் தகவல்.

Share

குடியரசுத் தலைவர் சென்னை வருகை

Share

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மார்ச் 2-ஆம் தேதி சென்னைக்கு வருகிறார். சென்னை தாம்பரத்தில் பயிற்சி முடித்த இந்திய விமானப்படை வீரர்களின் நிகழ்வில் மார்ச் 3-ஆம் தேதி பங்கேற்ற பிறகு அவர் தில்லி திரும்புகிறார்.

Share

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 25, 2017

Share

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். நடிகர் தனுஷை தங்களது மகன் என்று உரிமை கோரி மேலூர் தம்பதி தொடர்ந்த வழக்கில், அவர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மார்ச் 2-ஆம் தேதி சென்னைக்கு வருகிறார். உலகம் பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை […]

Share

இன்றைய செய்திகள் : பிப்ரவரி 24, 2017

Share

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக, கோவை அரசு மருத்துவமனையில் 36 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேந்த்ரிய வித்யாலயாக்களில் ஆன்லைனில் மாணவர் சேர்க்கை: வரும் கல்வியாண்டில் அறிமுகம். மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற மாநகராட்சிகளுக்கான தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. உலகம் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை சந்தித்துப் […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme