Month: November 2016

18.5 லட்ச ரூபாய் கைப்பற்றல் : பாஜக பொறுப்பாளர் மீது கட்சி நடவடிக்கை

Share

18.5 லட்ச ரூபாய் கைப்பற்றல் : பாஜக பொறுப்பாளர் மீது கட்சி நடவடிக்கை பாரதிய ஜனதாக் கட்சியின் மாவட்ட இளைஞரணிப் பொறுப்பாளரான ஜே.வி.அருண்குமார் என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு 18.50 லட்ச ரூபாய் பணத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது காவல்துறையினர் சோதனையில் சிக்கி அதன் பிறகு அவருடைய நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையும் நடைபெற்றுள்ளது. அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் தமிழிசை அறிவித்துள்ளார்.

Share

விழுப்புரம் அருகில் அரசுப்பேருந்துகள் மோதல்

Share

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அருகில் இரண்டு அரசு பேருந்துகள் மோதி விபத்து. 5 பேர் பலி. 37 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி

Share

நாடா புயல் : கடலோர மாவட்டப் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை

Share

நாடா புயல் : கடலோர மாவட்டப் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை ‘நாடா’ புயல் மையம் கொண்டுள்ளதை அடுத்து சென்னை, காஞ்சிபுரம், நாகை, திருவள்ளூர், கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

இன்றைய செய்திகள் : நவம்பர் 26, 2016

Share

சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்காததால் சட்டப்பேரவை வெறிச்சோடிக் காணப்பட்டது. 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியாது என்ற நிலையில் குமரியில் சிறுவணிகர்கள் ஸ்வைப் கார்டு மெஷினை கடைகளில்  வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளதையொட்டி, கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 28-ஆம் தேதி விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகம் ஈரான் நாட்டில் நின்று கொண்டிருந்த ஒரு பயணிகள் ரெயில் மீது […]

Share

மொபைல் ஃபோனிலேயே பணப் பரிவர்த்தனை செய்யுங்கள் – பிரதமர் மோடி

Share

மொபைல் ஃபோனிலேயே பணப் பரிவர்த்தனை செய்யுங்கள் – பிரதமர் மோடி தேர்தல் குறித்து எனக்கு எந்த கவலையுமில்லை. விவசாயிகள் நலனே எனக்கு முக்கியம். தேர்தலுக்காக எந்த பணிகளையும் செய்யவில்லை. துவங்கிய அனைத்து திட்டங்களையும் முடிப்பதே அரசின் நோக்கம். அரசியல் காரணங்களுக்காக எந்த திட்டமும் துவக்கப்படவில்லை.ஊழலும், முறைகேடும் ஏழை நடுத்தர மக்களை பாதித்துள்ளது. பண பரிவர்த்தனைகளை மொபைல் ஃபோனிலேயே மேற்கொள்ளுங்கள். மக்கள் தொகையைவிட மொபைல் ஃபோன் உபயோகம் 4 மடங்கு அதிகரித்துள்ளது, மின்னணு பரிவர்த்தனை குறித்து தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு […]

Share

2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்த கணக்கில் காட்டாத தொகைகளுக்கு 50% வரி விதிப்பு?

Share

2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்த கணக்கில் காட்டாத தொகைகளுக்கு 50% வரி விதிப்பு? 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்த தொகைகளுக்கு கணக்கு காட்டாவிட்டால் 50% வரிவிதிக்கப்படும் என்றும், மேலும் 25% தொகையை 4 வருடங்கள் எடுக்க முடியாத வகையில் முடக்கப்படும் என்றும் புதிய திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.

Share

100 ரூபாய் லஞ்சம் : மூன்று போலீஸார் சஸ்பெண்ட்

Share

100 ரூபாய் லஞ்சம் : மூன்று போலீஸார் சஸ்பெண்ட் கடலூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு சென்ற மணல் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கிய 3 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநரிடம் ரூ. 100 லஞ்சம் வாங்கியதாக காவலர்கள் தனசேகரன், தமிழ்மாறம், வாசுதேவன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Share

சென்னை வேளச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம்

Share

சென்னை வேளச்சேரி சாலையில் போக்குவரத்து மாற்றம் சென்னை பழைய வேளச்சேரி சாலையில் மழைநீர் வடிகால் பணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.காந்தி சாலை, வேளச்சேரி வழியாக கனரக வாகனங்கள் தரமணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கனரக வாகனங்கள் குருநானக் கல்லூரியில் இருந்து புறவழி சாலை வழியாக தரமணி செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme