Month: October 2016

இன்றைய செய்திகள் : அக்டோபர் 31, 2016

Share

அறுபடை வீடுகளில் 2வது படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா இன்று துவங்குகிறது. மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இந்திய – இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்கள் தில்லியில் நவம்பர் 5-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகாவில் பண்டிகைக் காலத்தில் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் இரு நாட்டு வீரர்களும் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இந்தியத் தரப்பில் இருந்து பாகிஸ்தானுக்கு இனிப்பு […]

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 30, 2016

Share

தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எல்லையில் பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், இந்தியா யாருக்கும் அடிபணியாது என்று எச்சரிக்கை விடுத்தார். ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கடந்த இரு நாள்களில் இதுவரை 126 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க கடப்பா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்த பிங்கி […]

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 28, 2016

Share

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இன்று முதல் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியத் தூதர அதிகாரி சுர்ஜீத் சிங், பாகிஸ்தானில் இருக்கத் தகுதியற்ற நபர் என்று கூறி அவர் வெளியேற வேண்டுமென்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 26, 2016

Share

தீபாவளி பண்டிகை: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம். சேலத்தில் உள்ளூர் டிவி சேனல்களில், தொலைபேசி மூலம் பட்டாசு ஆர்டர் எடுப்பதால் தரம் குறைந்த சீனப் பட்டாசுகள் விற்பனைக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர். பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார். புதுதில்லி, பாரக்கம்பா சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 11-வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேற்கு தில்லி […]

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 25, 2016

Share

ஜோலார்பேட்டை-ஈரோடு பயணிகள் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 55 பேரிடம் ரூ.15,390 அபராதமாக வசூலிக்கப்பட்டது. தளி வனப் பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப் பகுதிக்கு 20 யானைகள் இடம் பெயர்ந்துள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் மக்கள் குறைதீர் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சூளகிரியை அடுத்த இம்மிடிநாயக்கனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் தங்களது […]

Share

இடைத் தேர்தலில் இதுவே முதல் முறை: அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள்

Share

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது, அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நவம்பர் 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு […]

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 24, 2016

Share

பழனி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. புதிய வரவுகள் இல்லாதது வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கடந்த 2 மாதங்களில் சிறுகச் சிறுக ரூ. 14.65 லட்சத்தை திருடிச் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே காணை பகுதியில், வங்கி ஏடிஎம் அட்டையின் ரகசிய எண் விவரம் அடங்கிய 100-க்கும் […]

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 22, 2016

Share

பெண் வழக்குரைஞர் வீடு மீது தாக்குதல் நடத்தியதாக தொடரபட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். விருதுநகர் நகராட்சி பகுதியில் அனுமதியில்லாமல் பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்த வர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என நகராட்சி (பொ) ஆணை யாளர் ராமதிலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். புதுச்சேரி-சந்திரகாச்சி இடையே (சென்னை எழும்பூர் வழியாக) சுவிதா சிறப்பு ரயில் வருகிற […]

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 20, 2016

Share

தில்லி ஜெஎன்யூ பல்கலைகழக வளாகத்தில் நேற்று நள்ளிரவில் மாணவர் அமைப்பினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு. தமிழக அரசு இணையதளத்தின் முக்கியப் பக்கங்கள் புதன்கிழமை (அக். 19) திடீரென முடக்கப்பட்டன. இந்தப் பக்கங்கள் முடக்கப்பட்டு, அவற்றில் PAK CYBER SKULLZ என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளதால், இது பாகிஸ்தானின் சதி வேலையாக இருக்கலாம் என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் ‘பிசியோதெரபி’ பெண் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை. வங்க கடலில் குறைந்த […]

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 19, 2016

Share

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் செவ்வாய்க்கிழமை மாலை தமிழக எல்லையான தாமரைக்குப்பத்தை வந்தடைந்தது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் மியான்மர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆங் சான் சூகி செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உலகம் யேமனில் 72 மணி நேரப் போர் நிறுத்தம், இன்று நள்ளிரவு முதல் அமல்: ஜ.நா. அறிவித்தது. சிரியாவில் உள்ள அலெப்போ நகரில் 8 மணி நேரம் சண்டை நிறுத்தம் செய்வதாக ரஷியா அறிவித்துள்ளது.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme