Month: May 2016

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ‘ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும்’ நாளை முதல் அமலுக்கு வருகிறது

Share

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை நகலை கொண்டு வரவேண்டும். இது நாளை முதல் அமலுக்கு வருகிறது என்று அதிகாரிகள் கூறினர். முறைகேடுகளை தடுக்க: ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் குடும்ப அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் இருப்பில் உள்ளது? என்பதை குடும்ப அட்டைதாரர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு புதிய ஏற்பாட்டை தமிழக அரசு செய்ய […]

Share

லிபியா, எரித்ரியாவைச் சேர்ந்த 550 அகதிகள் பலி; மத்திய தரைக் கடல் பகுதியில் படகு விபத்து நடந்தது எப்படி? உயிர் தப்பியவர்கள் உருக்கமான பேட்டி

Share

மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த வாரம் லிபியா நாட்டின் படகு கவிழ்ந்து 550-க்கும் மேற்பட்ட அகதிகள் பலியாயினர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. ஆபத்தான கடல் பயணம்: சிரியா, ஈராக், ஏமன், துருக்கி, லிபியா, சூடான், எரித்ரியா உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் இடைத்தரகர்கள் மூலம் பாதுகாப்பற்ற படகுகளில் கடல் பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு புலம் பெயர்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த […]

Share

அமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் அடையாளம் தெரியாத அதிசய பொருள்

Share

அமெரிக்கா வான்வெளியில்  அமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் அடையாளம் தெரியாத அதிசய பொருள் பறப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது வேற்றுகிரகவாசிகளின் உளவு பார்க்கும் கருவியா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இகியோ  மாகாணத்தின் டேடன்  நகரில் வசிக்கும் தம்பதியினர் இக்காட்சியை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இருவரும் வீட்டிலிருந்து சூரியன் மறைவதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போது, இந்த அதிசய பொருள் வானத்தில் மிதந்து கொண்டிருந்ததை கண்டு வியந்துள்ளனர், பின்னர் அதை […]

Share

அடையாறு மேம்பாலத்தில் நடிகர் சூர்யா, வாலிபர் ஒருவரை தாக்கியதால் பரபரப்பு

Share

அடையாறு மேம்பாலத்தில் நடிகர் சூர்யா, வாலிபர் ஒருவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கார் மோதல்: சென்னை பிராட்வே திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரவீண்குமார் (வயது 21). இவர் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சக நண்பருடன் நேற்று மாலை பாரிமுனையில் இருந்து அடையாறு நோக்கி சென்றார். அடையாறு திரு.வி.க. மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது, முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென்று ‘பிரேக்’ போட்டதால், அந்த கார் மீது பிரவீண்குமார் மோதிவிட்டார். அந்த காரை பெண் ஒருவர் […]

Share

முதல்வரைப் பாராட்டி ஃப்ளெக்ஸ் வைத்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை

Share

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் ரவி, தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடித்ததைப் பாராட்டி ஃப்ளெக்ஸ் போர்ட் வைத்தார். இது குறித்து அரசின் பார்வைக்கு தகவல் சென்றது. இப்போது அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்த ரவி, தான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை என்றும், முதலமைச்சரை தனிப்பட்ட முறையில் பிடிக்கும் என்பதால் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இந்த ஃப்ளெக்ஸ் போர்ட் வைக்கப்பட்டது […]

Share

இன்றைய செய்திகள் : மே 31, 2016

Share

ரயில் டிக்கெட் முன்பதிவு: இனி கிரெடிட் கார்டுகளுக்கு சேவைக் கட்டணம் கிடையாது. எல்லை தாண்டிய “மனிதநேயம்’: நேபாள குழந்தைகளுக்கு அரியவகை பிரிவு ரத்தம் கொடுத்து காப்பாற்றிய இந்திய பாதுகாப்பு அதிகாரி. நொய்டாவில் வர்த்தக இணையதளம் மூலம் திருட்டு காரை அதன் உரிமையாளரிடமே விற்க முயன்றவர் கைது. மாநிலங்களவைத் தேர்தல்: மனு தாக்கலுக்கு இன்று கடைசி. வேலூர் ஊரீசு கல்லூரி முதல்வர் பொறுப்புக்கு ஒருவரை நியமிப்பதற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுச்சேரி மாநில அரசு […]

Share

தினசரி ராசி பலன் : மே 31, 2016

Share

மே 31, 2016 – செவ்வாய் நல்ல நேரம் : காலை 10.30 – 11.30 மாலை 04.30- 05.30 ராகுகாலம் : 03.00 – 04.30 எமகண்டம் : 09.00 – 10.30 சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம் மேஷம் :  பகை ரிஷபம் : அச்சம் மிதுனம் : வரவு கடகம் : பயம் சிம்மம் : நன்மை கன்னி : ஆதாயம் துலாம் : ஆக்கம் விருச்சிகம் : பக்தி தனுசு : சினம் மகரம் : தாமதம் கும்பம் : செலவு மீனம் : லாபம்

Share

‘‘புதிய அணை தேவை இல்லை’’ முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கேரள முதல்-மந்திரியின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

Share

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. டெல்லி பயணம்: அண்மையில் கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றது. அந்த கூட்டணி சார்பில் மார்க்சிஸ்டு கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் டெல்லி சென்ற பினராயி விஜயன், ஜனாதிபதி […]

Share

இன்றைய செய்திகள் : மே 30, 2016

Share

நாட்டை தவறான பாதையில் வழி நடத்தமட்டேன்: மோடி உறுதி. ஓராண்டில் புகைப்பழக்கத்தால் சுமார் 4 லட்சம்பேர் உயிரிழப்பு: சுகாதாத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஹிமாசலப் பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பேரன் அபிதேஜ் சிங் (27) உயிரிழந்தார். மொராக்கோ, துனீசியா ஆகிய வட ஆப்பிரிக்க நாடுகளுக்கு 5 நாள் பயணமாக குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி இன்று செல்கிறார். காஷ்மீரில் ஆயுத குவியல் சிக்கியது பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை. […]

Share

மாணவர்கள் மொபைல் ஃபோன், பைக் பயன்படுத்த தடை

Share

மொபைல் ஃபோன், மோட்டார் சைக்கிளுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தலைமை ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனையடுத்து, பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரைகள் வழங்கி உள்ளது. இந்த அறிவுரைகளை மாணவர்கள் பின்பற்றத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme