Month: November 2015

இன்றைய செய்திகள் : நவம்பர் 24, 2015

Share

திமுக சார்பில் 1 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதியை தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் வழங்கினார்.    நிலக்கோட்டை முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பொன்னம்மாள் இயற்கை எய்தினார். #RIP    

Share

பேங்காக்கில் சூப்பர் ஸ்டார்

Share

மலேஷியாவில் படப்பிடிப்பை முடித்த ‘கபாலி’ குழுவினர் மூன்று நாட்கள் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து தலைநகர் பேங்காகில் இருக்கின்றனர். மலேஷியாவைப் போலவே தாய்லாந்திலும் ஏராளமான ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர். அவற்றில் சில.. படப்பிடிப்பினை முடித்துக் கொண்டு சூப்பர் ஸ்டார் மட்டும் இன்று சென்னை திரும்பினார். படக்குழுவினர் நாளை திரும்புகின்றனர்.

Share

இன்றைய செய்திகள் : நவம்பர் 23, 2015

Share

வெள்ள நிவாரணம் – தமிழகத்துக்கு முதல் கட்டமாக 940 கோடி ரூபாயை ஒதுக்கியது மத்திய அரசு ** ஜெ. சொத்து வழக்கு விடுதலையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை 2016 பிப்ரவரி 2-ம் தேதி முதல் விசாரணை – உச்ச நீதிமன்றம் உத்தரவு ** கிரானைட் முறைகேடு விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் சகாயம், ஐ.ஏ.எஸ். ** கோவையில் ஆக்கிரமிப்பு புகாருக்கு உள்ளான துணிக்கடை ஒன்றின் குடோன் இடிந்து விழுந்தது. உயிர்ச்சேதம் எதுவுமில்லை. ** […]

Share

இன்றைய செய்திகள் : நவம்பர் 17, 2015

Share

பிரபல முருகன் பக்தி பாடல் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95. ஆழ்ந்த அனுதாபங்கள் ** தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக திமுக சார்பில் தமிழக அரசிடம் 1 கோடி வழங்கப்படும் – மு. கருணாநிதி ** விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அஷோக் சிங்கால் காலமானார். ஆழ்ந்த அனுதாபங்கள் ** ஜாஸ் சினிமாஸின் (@jazzcinemas) ஐமாக்ஸ் நவம்பர் 20 முதல் கோலாகல ஆரம்பம்..

Share

மயிலாடுதுறை : கடைமுழுக்கு தீர்த்தவாரி

Share

மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி மாத விழாவின் கடைசி நாளான கடைமுழுக்கு தீர்த்தவாரி விழா இன்று மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. மழையையும்  ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். (புகைப்படங்கள் நன்றி : ஸ்ரீனிவாஸ்)

Share

உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் – முதல்வர் உறுதி

Share

தமிழகமெங்கும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பெருமழையின் காரணமாக பல இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. பலத்த சேதமும் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்னமும் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா நேரில் சென்று பார்த்தார். ”வடகிழக்கு பருவமழை என்பது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரு சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்து விட்டது. மாதக்கணக்கில் பெய்ய வேண்டிய […]

Share

இன்றைய செய்திகள் : நவம்பர் 16, 2015

Share

  தமிழகமெங்கும் பல இடங்களில் இன்றும் பரவலான மழை தொடருகிறது. ** சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கிறார் முதல்வர் ஜெ. ** கோயம்பேடு அருகில் ரயில் நகர் பாலம் உடைந்தது. (புகைப்படம் நன்றி : பிச்சுமணி) ** சென்னையில் மீண்டும் மழை. சுனாமி எச்சரிக்கை என்று பரவும் எஸ்.எம்.எஸ்., / வாட்ஸப் வதந்திகளை நம்பாதீர்கள். ** மழை, வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்பிற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு – முதல்வர் உத்தரவு […]

Share

இன்றைய செய்திகள் : நவம்பர் 14, 2015

Share

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தீவிரவாதிகள் 7 இடங்களில் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் பலி. ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.

Share

இன்றைய செய்திகள் : நவம்பர் 13, 2015

Share

தீபாவளி தினத்தன்று முதல்வர் ஜெ. குறித்து அவதூறான படமொன்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்த ஊட்டியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற வழக்கறிஞர் கைது. ** சென்னையில் மேயர் சைதை துரைசாமி மீது தாக்குதல் என்று தகவல். ** திருவண்ணாமலை சுகநதி ஆற்றில் தரைப்பாலம் உடைந்தது

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme