Month: October 2015

யாருக்கோ கொடுத்த விருதை யாரோ எப்படி திருப்ப முடியும்?

Share

நாட்டில் நிலவும் மதவாதப் போக்குக்குக் கண்டனம் தெரிவித்து ஏழாவது மனிதன் படத்துக்காக கிடைத்த தேசிய விருதை திருப்பி அளிப்பதாக அருண்மொழி என்பவர் அறிவித்திருந்தார். உடனே ருத்ரன், மார்க்ஸ் அந்தோணிசாமி போன்றவர்கள் புளகாங்கிதப்பட்டு வரவேற்றுள்ளனர். ஆனால், “யார் வாங்கின விருதை யார் திருப்பித் தருவது? ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாளை சண்முகம்.  படத்தின் இயக்குநர் கே. ஹரிஹரன். அருண்மொழி அந்தப் படத்தில் துணை வசனகர்த்தாவாகவும், உதவி இயக்குநராகவும் இருந்தார். அந்தப் படத்திற்கு ஒரு தேசிய விருது கிடைத்தது. […]

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 30, 2015

Share

விமான டிக்கெட்டுகளுக்கு 2% லெவி வரி விதிக்க மத்திய அரசு திட்டம் ** டாஸ்மாக் எதிர்ப்பு பிரசார பாடலில் தமிழக முதல்வரை விமர்சித்து பாடியதற்காக நாட்டுப்புற பாடகர் கோவன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசத் துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ** ஹிந்து நாளிதழ் நிர்வாகம் தீபாவளி போனஸ் வழங்காததை எதிர்த்து பத்திரிகை ஊழியர்கள் சார்பில் சென்னையில் இன்று அடையாள உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது ** மும்பையில் ராஜ்தாக்கரேவை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். […]

Share

செந்தமிழில் அர்ச்சிக்கும் சீமான்?

Share

‘நாம் தமிழர்’ கட்சியின் நிறுவனரான சீமானிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஒருவரை அந்தக் கட்சியினர் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன். ஆந்திராவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி ஒன்றில் படித்து வருகிறாராம். தேனி மாவட்ட நாயக்கர் சங்கத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போடி நாயக்கனூர் தொகுதி வேட்பாளராக  அறிவிக்கப்பட்டிருக்கும் அன்பழகனுக்கு நெருங்கிய நண்பர் தான் என்று ஜெகதீசன் கூறுகிறார். அண்மையில் திருப்பூரில் ஒரு […]

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 29, 2015

Share

நீதிபதிகள் குறித்து தரக்குறைவாக பேசியதற்காக கவிஞர் வைரமுத்து மேல் தொடரப்பட்ட வழக்கில் 4 வாரங்களுக்குள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் வைரமுத்துவுக்கு உத்தரவு ** மூளைக்காய்ச்சலால் கடந்த 40 நாட்களாக  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா (வயது 13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் ** பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுகிறார்கள். திமுகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி சேரமாட்டோம் – திருமாவளவன்

Share

சூப்பர் ஸ்டாருக்கு மலாக்கா ஆளுநர் விருந்து

Share

கபாலி திரைப்பட ஷூட்டிங்கிற்காக நேற்று மலேஷியா சென்ற சூப்பர் ஸ்டாருக்கு நேற்று அங்கே பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மலாக்கா ஆளுநர் மொஹ்த் கஹாலில் பின் யாகுப் சூப்பர் ஸ்டாருக்கு விருந்தளித்தார். படத்தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் விருந்தில் கலந்து கொண்டனர்.  

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 26, 2015

Share

ட்வீட்டரில் சதீஷ்வாசன் என்ற பெயரில் இயங்கி வந்த ஸ்ரீனிவாசன் என்கிற வாசன் காலமானார். போட்ஸ்வானாவில் வசித்து வந்த அவர், கடந்த 8-ம் தேதியன்று ரயில் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 26-ம் தேதி காலமானார். ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். ** ராஜபக்சேவின் கட்சியிலிருந்து விலகிய கருணா, ஆனந்தசங்கரியின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைகிறார். ** லட்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 29 இலங்கை மீனவர்கள் கைது ** கருணா தமிழர் ஐக்கிய முன்னிலையில் […]

Share

மலேஷியாவிற்குக் கிளம்பினார் சூப்பர் ஸ்டார்

Share

’கபாலி’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்கள் நடைபெற்றது. அதன் அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட கபாலி படக்குழுவினர் இன்று மலேஷியா புறப்பட்டுச் சென்றனர்.

Share

சிறு நூலுக்கும் சந்தர்ப்பம் வரும் – மனோபாலா பதிலடி

Share

நடிகர் சங்கத் தேர்தலுக்கு முன் மேடைகளில் நடிகர் ராதாரவி எதிரணியினரை ஏகவசனத்தில் திட்டியதை வழக்கமாகவே வைத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எல்லை மீறி ஜாதியை இழுத்தெல்லாம் திட்ட ஆரம்பித்தார். அவரது சகோதரியான ராதிகாவும் கூட. நடிகரும் இயக்குநருமான மனோபாலாவை ‘நூல் சைஸூக்குக் கூட இருக்க மாட்டான். அவன், எஸ்.வி.சேகர் போன்ற நூல்களெல்லாம் (பிராமணர்கள்) ஒன்றாகி விட்டார்கள்” என்றெல்லாம் வசைமாறிப் பொழிந்தார். சரத்குமார் அணியின் படுதோல்விக்கு ராதாரவியின் அகங்கார ஆணவப் பேச்சுகள் தான் முக்கியக் காரணம் என்று பலரும் […]

Share

இன்றைய செய்திகள் : அக்டோபர் 20, 2015

Share

‘கல்கி’ குழும பக்தி இதழான தீபம் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் ஸ்ரீனிவாசராகவன் மற்றும் அவரது மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். பள்ளிக்கூடம் செல்லும் சிறுவயது மகன் அவர்களுக்கு இருக்கிறான். ஆழ்ந்த அனுதாபங்கள்

Share

நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள்

Share

நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ‘பாண்டவர் அணி’ என்ற நடிகர் நாசர் தலைமையிலான  விஷால் அணியினர் வெற்றி பெற்றுள்ளனர். தலைவர் பதவிக்கு நாசருக்கும், சரத்குமாருக்கும் நடந்த போட்டியில் நாசர் வெற்றி பெற்றுள்ளார். நாசர் : 1,334   சரத்குமார் : 1,231   சிவசாமி : 4 வாக்குகள் பெற்றனர். துணைத்தலைவர்களுக்கான போட்டியில் விஷால் அணியின் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். சரத்குமார் அணியைச் சேர்ந்த சிம்பு, விஜயகுமார் ஆகியோர் தோல்வி பெற்றனர். […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme