Month: August 2015

செப்டம்பர் 4 : கோவையில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொள்ளும் ஈஷா கிராமோத்சவம்

Share

கோவை ஈஷா தியான மையம் சார்பில் ‘ஈஷா கிராமோத்சவம்’ என்ற நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 4-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவையில் நடைபெற உள்ளது. கொடீஷியா மைதானத்தில் காலை 10 மணிக்கு கிராமப்புற விளையாட்டுப் போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மாலை 4 மணிக்கு கால்பந்தாட்டப் போட்டிகள் இறுதியாட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு 6.30 மணியளவில் நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் விருதுகளையும், பரிசுகளையும் வழங்குகிறார். […]

Share

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 31, 2015

Share

அதிமுக – திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு மாற்று சக்தி தமிழகத்தில் உருவாகும் – தமிழிசை செளந்தரராஜன் இலங்கையில் இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகளின் கடல் பிரிவு வீரர்களை அழிக்க உதவிய இந்திய விரஹா கப்பல், இலங்கையிடமே தாரை வார்க்கப்பட்டுள்ளது தமிழகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வரும் 518 கோயில்களில் பணிபுரியும் 820 தற்காலிகப் பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் – சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் தமிழக சட்டசபையில் விதி எண் 110- ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள […]

Share

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 29, 2015

Share

  இன்று ஆவணி அவிட்டம் இன்று ரக்‌ஷா பந்தன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோ ராமசாமியைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் டாக்டர் ராமதாஸ் ஆர்னால்டு ஸ்வாஷ்நெகர் நலமுடன் இருக்கிறார். அவர் இறந்து விட்டதாகப் பரவும் வதந்திகளை நம்பாதீர்கள்.

Share

மருத்துவமனையில் ’சோ’ ராமசாமி : சந்தித்தார் முதல்வர்

Share

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோ ராமசாமியை நேரில் சந்தித்தார் முதல்வர் ஜெ. ஜெயலலிதா. அவரிடம் ஆறுதல் கூறிய விடியோ காட்சி :

Share

இன்றைய செய்திகள் : ஆகஸ்ட் 28, 2015

Share

ஓணம் வாழ்த்துகள் இன்று வரலட்சுமி விரதம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் முன் ஜாமீன் நிபந்தனையைத் தளர்த்த உச்ச நீதிமன்றம் மறுப்பு சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 12 நகரங்கள் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Share

மருத்துவமனையில் சோ-வைச் சந்தித்தார் முதல்வர்

Share

உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியை இன்று நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா

Share

சிவாஜி மணிமண்டபம் : தமிழக அரசுக்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு

Share

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட உள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அறிவித்தார். பலரும் இதனை வரவேற்றுள்ளார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்வீட்டர் செய்தி :

Share

உலகத் தமிழர்களுக்குச் சொந்தமானவர் நடிகர் திலகம்

Share

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பாக இன்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த போது பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ., விஜயதாரணி, “அவர் எங்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்” என்று கூறினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, “மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எந்தவொரு கட்சிக்கும், எந்தவொரு நாட்டிற்கும் சொந்தமானவர் அல்ல என்றும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும், தமிழ் நடிகர்களை ரசிக்கும் தமிழர்களுக்கும் சொந்தமானவர் என்பதால், அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்க […]

Share

சானியா மிர்ஸாவுக்கு கேல் ரத்னா விருது வழங்க இடைக்காலத் தடை

Share

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவிற்கு கேல் ரத்னா விருது வழங்கவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு கர்நாடக விளையாட்டு வீரர் கிரீஷ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தனக்குத் தான் அந்த விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று கிரீஷ் கூறியுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சானியா மிர்ஸாவுக்கு விருது வழங்க இடைக்காலத் தடை விதித்திருக்கிறது கர்நாடக உயர்நீதிமன்றம்.

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme