Share

Swamy39

புருடா விடுவதையே பழக்கமாக வைத்துள்ள சுப்ரமணியம் சாமியின் லேட்டஸ்ட் புருடா இது.

“பாரதிய ஜனதா அமைச்சர்களை பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு அனுப்ப இருந்தது. ஆனால் சசிகலாவிடம் சோனியாகாந்தி வேண்டாம் என்று சொன்னதையடுத்து ஜெயலலிதா அதனைத் தடுத்து விட்டார். அதிமுக வட்டாரங்கள் இதனை என்னிடம் தெரிவித்தன” – என்று ட்வீட்டரில் தெரிவித்துள்ளார் சுனா சானா.

பாரதிய ஜனதா சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செய்தி சுனா சானாவுக்குத் தெரிவிக்கப்படவில்லை போல.

தனது கட்சித் தொண்டரின் திருமணத்திற்குச் சென்று, மணப்பெண்ணின் கழுத்தில் இவரே தாலி கட்டவிருந்த விஷயம், அந்தக் கட்சியில்  இருக்கும் சொற்ப அளவிலான தொண்டர்களிடையே கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை திசை திருப்பவே சுனா சானா இப்படியெல்லாம் கிளப்பி விடுகிறார் என்கிறார்கள் அவர்கள் கட்சி வட்டாரத்திலேயே.

Share
The short URL of the present article is: http://seythigal.in/zYzR5