Share

CM Jayalalithaவரும் வெள்ளிக்கிழமை மே 22-ம் தேதி காலை 7 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அநேகமாக அதில் அவரை முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அன்றே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதவி விலகி ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டு, மறுநாள் 23-ம் தேதி சனிக்கிழமை ஜெ. முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

மே 23 சனிக்கிழமை சஷ்டி தினம்.

22-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்த உடன் மக்களையும், ஊடகங்களையும் அவர் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

Share
The short URL of the present article is: http://seythigal.in/V4Z5f