Share

Meet With PM

காவிரி பிரச்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் மோடியை விஜயகாந்த் தலைமையில் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்  நேரில் சென்று சந்தித்துப் பேசினார்கள்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த அந்தச் சந்திப்பின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் எந்தவொரு கேள்விக்கும் பதில் தரவில்லை. பிரதமரைச் சந்தித்த போது உடன் இருந்த கனிமொழி, திருமா போன்றவர்களும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு இணைந்து வரவில்லை.

எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதற்கு பதில் சொல்லாமல் மழுப்பலாக வேறு எதையோ வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அருகில் அமர்ந்திருந்த திருச்சி சிவா, பொன். ராதாகிருஷ்ணன் போன்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் நெளிந்து கொண்டிருந்தார்கள்.

“ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்களா?” என்று ஜெயா டிவியின் நிருபர் கேட்ட கேள்விக்கு, “உங்க டிவிக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டேன்” என்றெல்லாம் ஏகத்துக்கும் எகிற ஆரம்பித்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் “உன்னை அடிப்பேன். ஜெயா டிவின்னா கொம்பா முளைத்திருக்கிறது. ஜெயலலிதாவைப் பத்தி குண்டக்க மண்டக்க பேசுவேன்” என்றெல்லாம் உளற ஆரம்பித்து  நிருபரை அடிக்கவும் கிளம்பினார். இதற்கு மற்ற செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், ‘செய்தியாளர்களிடம் பேச முடியாது’ என்று கோபித்துக் கொண்டு கிளம்பிச் செல்ல ஆரம்பித்தார். அவருடைய மச்சான் சுதீஷ் போன்றவர்கள் போய் சமாதானப்படுத்திக் கூப்பிட்டுக் கொண்டு வந்தனர். இதனையெல்லாம் பார்த்த பொன்.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் சொல்லாமலேயே அந்த இடத்தை விட்டு கிளம்பிச் சென்று விட்டார்கள்.

“இந்தக் கூட்டணி தேர்தலிலும் தொடர வேண்டும் என்று மு.கருணாநிதி தெரிவித்துள்ளாரே?” என்ற கேள்விக்கு, “நான் பேப்பரைப் படிக்கவில்லை” என்று பழைய மலேஷிய ரிட்டர்ன் பதிலையே இப்போதும் கூறினார் விஜயகாந்த்.

அனைத்துக் கட்சியினரும் சந்தித்த பிறகு பிரதமர் மோடியிடம் சில நிமிடங்களில் விஜயகாந்தும், அவரது மச்சான் சுதீஷும் மட்டும் பேசிவிட்டு வந்தனர். அது குறித்து கேட்ட போது, “அது தனிப்பட்ட விஷயம். உங்க வீட்டு விஷயத்தையெல்லாம் கேட்டா சொல்லுவீங்களா?” என்றும் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கோபப்பட்டார்.

விடியோ காட்சி – நன்றி : புதிய தலைமுறை

http://www.youtube.com/watch?v=ZZKmxIV3suk

Share
The short URL of the present article is: http://seythigal.in/ZYqFc