Month: April 2015

நெட் நியூட்ராலிடி – ஆப்பு வைத்த ட்ராய் அமைப்பு

Share

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வாட்ஸப், ஃபேஸ்புக், ட்வீட்டர் போன்றவற்றுக்கு தனிக் கட்டணம் வசூலிக்கும் விதமாக சில திட்டங்களை அறிவித்ததற்கு நாடு முழுவதிலும் இருந்து பெரும் எதிர்ப்பு எழுந்தது. எனவே இது குறித்து எதிர்ப்பினை பதிவு செய்யலாம் என்று தொலைத்தொடர்பு அமைப்பான ‘ட்ராய்’ (TRAI) அறிவித்திருந்தது. நாடு முழுவதிலுமிருந்து பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தனர். ‘Net Neutrality’-க்கு ஆதரவு தெரிவித்து அரசியல்வாதிகள் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்திருந்தார்கள். இந்நிலையில் எதிர்ப்பினைப் பதிவு செய்த சுமார் […]

Share

அடிச்சிடுவேன் – நிருபர் மீது பாய்ந்த விஜயகாந்த்

Share

காவிரி பிரச்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் மோடியை விஜயகாந்த் தலைமையில் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்  நேரில் சென்று சந்தித்துப் பேசினார்கள். சுமார் அரை மணி நேரம் நீடித்த அந்தச் சந்திப்பின் இறுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் எந்தவொரு கேள்விக்கும் பதில் தரவில்லை. பிரதமரைச் சந்தித்த போது உடன் இருந்த கனிமொழி, திருமா போன்றவர்களும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு இணைந்து வரவில்லை. எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதற்கு பதில் சொல்லாமல் மழுப்பலாக வேறு […]

Share

பவானிசிங் நியமனம் செல்லாது. ஆனால் மறுவிசாரணை தேவை இல்லை.

Share

முன்னாள் முதல்வர் ஜெ.  ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில் இன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று பேர் பெஞ்சு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,”ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது; அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடகா அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்துவிட்டதால் அதில் […]

Share

Paypal-க்குப் போட்டியாக களம் இறங்குகிறது கூகுள் வாலட்

Share

கூகுளின் ஜிமெயில் (Gmail) மூலம் இனி மின்னஞ்சல்களை மட்டும் அனுப்பி, பெறுவதோடு மட்டுமின்றி பணமும் அனுப்பி, பெற முடியும். தற்போது அமெரிக்கவாசிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள இந்த வசதி விரைவில் உலகெங்கிலும் பல நாடுகளிலும் உள்ளவர்களுக்கும் வர உள்ளது. ஏற்கனவே பேபால் (Paypal) மூலமாக இப்படி பணம் அனுப்பி, பெறும் வசதி உள்ளது. இப்போது ஜிமெயில் இந்த வசதியினை தருவதன் மூலம் பேபாலுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள ‘கூகுள் வாலட்’ என்ற இந்த […]

Share

திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதா நிறைவேறியது

Share

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு மசோதாவை கடந்த டிசம்பர் மாதம் கொண்டு வந்தார். இந்த மசோதா ஏகமனதாக இன்று நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் பலன் பெறுவர். 1970க்குப் பின் கடந்த 45 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள ஒரே தனி நபர் விருப்ப மசோதா இது தான். திருநங்கைகளுக்கு வங்கி கணக்கு துவக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் வேலை வாய்ப்பு, கடன் வசதி கிடைக்க வழி […]

Share

பிரிஜேஷ் குமார் & ராம் ஜீவன் : ஒரு மனித நேய நிஜக் கதை

Share

  உத்திரப்பிரதேசம் சீதாப்பூர் மாவட்டத்திலுள்ள சரையான் என்ற குக்கிராமம் தான் ராம் ஜீவனுக்கு! எந்தவித நவீன வசதிகளும் எட்டிப்பார்க்காத அந்தக் கிராமத்திற்கு தொலைபேசி வசதிகளே இப்போது தான் வந்திருக்கிறது. ஊரில் மிகச் சொற்பமானவர்களே மொபைல் ஃபோன் வைத்திருக்கிறார்கள். ராம் ஜீவனுக்கு 35 வயதாகியிருக்கலாம். 1995-ம் ஆண்டின் போது சுமார் 12 வயதாம். என்ன காரணத்தினாலோ வீட்டில் சண்டை பிடித்து அங்கிருந்து ஓடி வந்திருக்கிறார். அருகிலிருந்த இன்னொரு ஊரில் கொஞ்ச நாள் ஒரு விவசாயியின் வீட்டில் எடுபிடி வேலைகள் […]

Share

பெங்களூரு மேல்முறையீடு வழக்கு – மறுவிசாரணை தேவையில்லை – உச்சநீதிமன்றம்

Share

பெங்களூருவில் நடைபெற்று வரும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின்  மேல்முறையீட்டு மனு மீதான  வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானது சட்டப்படி தவறானது. மேல்முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. ஆனால், இது நடைமுறையில் ஏற்பட்ட தவறு என்பதால், அந்த மேல்முறையீட்டு வழக்கில் மறுவிசாரணை செய்யத் தேவை இல்லை. திமுக பொதுச்ச்செயலாளர் அன்பழகன் தரப்பில் வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்ய […]

Share

பள்ளிக்கூடத்தில் கக்கூஸ் கழுவ நிர்பந்தம்

Share

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகில் பண்டிதன்குறிச்சி என்ற ஊரில் உள்ள ‘இந்து உயர்நிலைப்பள்ளி’ என்ற அரசு உதவி பெறும் பள்ளியில் கிட்டத்தட்ட 500 பேர் படித்து வருகின்றனர். இவர்களில் ஆறாவதிலிருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை தினமும் மாலையில் பள்ளிக்கூடம் விட்டதும் கழிவறைகளைச் சுத்தப்படுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். செய்ய மறுத்த மாணவர்களை மிரட்டவும் செய்திருக்கிறார்கள். இது குறித்து கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர் நேற்று பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதனையடுத்து அவர்களிடன் மன்னிப்பு கேட்டுள்ள பள்ளி […]

Share

சென்னையில் இருவரின் பூணூல் அறுப்பு – ரெளடிகள் வெறிச்செயல்

Share

நேற்று மாலை சென்னையில் மைலாப்பூர் மற்றும் மேற்கு மாம்பலத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் வயதான பிராமணர்கள் இருவரை தாக்கி பூணூலை அறுத்தெரிந்திருக்கிறார்கள் திராவிடர் விடுதலை கழகம் என்ற அமைப்பைச்  சேர்ந்த குண்டர்கள்.  மைலாப்பூர் முண்டக்கண்ணியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வநாத குருக்கள். வயது 76. நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் மாதவப் பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 கயவர்கள் திடீரென இறங்கி இந்த வயதானப் பெரியவரிடம் தங்கள் வீரப்பராக்கிரமத்தைக் […]

Share

குடிபோதையில் ஆம்னி பஸ் ஓட்டிய KPN ட்ராவல்ஸ் டிரைவர்

Share

KPN ட்ராவல்ஸ் என்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் குடிபோதையில் பேருந்தை ஓட்டிய போது பயணிகளால் கையும், பாட்டிலுமாய் பிடிபட்டிருக்கிறார். இதனை மொபைல்களில் படம் பிடித்த பயணிகள் வாட்ஸப் மூலம் உடனடியாக நண்பர்களுக்கு பரப்பியிருக்கிறார்கள். ”ஏற்கனவே இந்த தனியார் பேருந்து நிறுவனம் பொதுமக்களை அலட்சியப்படுத்துவதாக ஏராளமான புகார்கள் வருகின்றன. ஆனால் இது குறித்து புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. கிட்டத்தட்ட monopoly என்ற நினைப்பிலேயே இந்த நிறுவனம் நடந்து கொள்கிறது. கோவையில் உள்ள இந்த நிறுவனத்தின் […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme