Month: February 2015

லிங்கா : ரசிகர்களுக்கும் ரீஃபண்ட் வேண்டும் – புது கோரிக்கை

Share

’லிங்கா’ திரைப்பட பிரச்னையில் தப்பித்தவறி விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தொகை எதுவும் திருப்பி வழங்கப்பட்டால், அவர்கள் ஏற்கனவே கூடுதல் தொகை கொடுத்து படம் பார்த்த திரை ரசிகர்களுக்கு அந்தத் தொகையை திருப்பித் தர வேண்டும். – இப்படி ஒரு கோரிக்கையை, ’திரையரங்கிற்குச் சென்று திரைப்படம் பார்க்கும் தமிழ் ரசிகர்கள்’ என்ற பெயரில் ஒரு அறிக்கையில் சிலர் வைத்திருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கும் அந்தக் கோரிக்கை :

Share

ரசிகர்களைச் சந்தித்தார் சூப்பர் ஸ்டார்

Share

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லதா தம்பதியினரின் 35-வது திருமண நாள். 26 பிப்ரவரி 1981-ம் தேதியன்று திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையொட்டி சென்னை போயஸ் கார்டன் பகுதியில் ரஜினிகாந்த் இல்லத்திற்கருகே ஏராளமான ரசிகர்கள் குழுமியிருந்தனர். திடீரென அங்கே வந்த ரஜினிகாந்த் ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார்.     ரஜினிகாந்த் தம்பதியினருக்கு செய்திகள்.காம் இணைய தளத்தின் வாழ்த்துகள்! நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான், பேரு விளங்க நல்லா வாழணும்! […]

Share

லிங்கா பிரச்னை : வேதம் ஓதும் திரையரங்க உரிமையாளர் சங்கம்

Share

‘லிங்கா’ திரைப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமார் ஆகியோருடன் ‘லிங்கா’ திரைப்பட வினியோகஸ்தர்கள் பிப்ரவரி 19-ம் தேதி பேச்சு வார்த்தை நடத்தினர். மொத்த நஷ்டத்தில் 8 கோடி ரூபாய் நஷ்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மீதியைத் தாருங்கள் என்று வினியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்தனர். இது சம்பந்தமாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் ரஜினிகாந்த் ஆகிய இருவருடன் பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு ஏற்பாடு செய்வதாக சரத்குமார் உறுதியளித்தார். சுமூகமான […]

Share

லிங்கா குறித்து அவதூறுப் பிரசாரத்துக்குத் தடை

Share

’லிங்கா’ பிரச்னையில் சிங்காரவேலன் தரப்பினர் மற்றும் ஆங்கில, தமிழ், ஹிந்தி, கன்னட ஊடகங்கள் உள்ளிட்ட 105 தரப்பினர்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் லிங்கா திரைப்படத்தில் பணியாற்றிய யார் குறித்தும் அவதூறுப் பிரசாரம் செய்யக்கூடாது என்று கர்நாடக  நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தடை உத்தரவு (Prohibitory injunction) கோரியிருந்தார். சிங்காரவேலன் (மெரினா பிக்சர்ஸ்), கிருஷ்ணகுமார், பாலவிஸ்வநாதன் (கேப்ரிகார்ன் பிக்சர்ஸ்), பாலவிஸ்வநாதன் (விஜய பார்கவி எண்டர்டெயின்மெண்ட்ஸ்), ஆர்.எம்.கந்தன் &  ஆவுடைநாயகம் (டெண்டு கொட்டாய் பிக்சர்ஸ்), […]

Share

விஜய் மக்கள் இயக்கத்தில் சிங்காரவேலன்?

Share

‘லிங்கா’ சிங்காரவேலனின் இன்றைய ஸ்டண்ட் இது. தனது வாட்ஸப் ப்ரொஃபைலில் விஜய்யுடன் தான் இருந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பிரச்னை கிளப்புகிறார்கள் என்று கூறியிருந்தார் சிங்காரவேலன். மேலே உள்ளது அவருடைய இன்றைய வாட்ஸப் ப்ரொஃபைல் படம். “விஜய் மக்கள் இயக்கத்தில் சேர்ந்து விட்டீர்களா?” என்று சிங்காரவேலனிடம் கேட்டோம். இது வரை பதில் இல்லை. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது வாட்ஸப் ப்ரொஃபைல் படம் மாற்றப்பட்டது. தனது வாட்ஸப் ப்ரொஃபைல் படங்கள் மூலமாக இந்த உலகத்திற்கு என்னவோ […]

Share

கல்லூரிப் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Share

தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மதுரை பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்  ஆகிய சங்கங்களின் கூட்டு போராட்டக் குழுவின் திருச்சி, தஞ்சை, சென்னை மண்டலங்களின் சார்பில் 37 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் சென்னையில் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை விடுதலை செய்யப்படுவார்கள். ஆர்ப்பாட்டம் குறித்து போராட்டத்தில் […]

Share

தலைமை தூண்டி விட்டு திட்டச் சொல்கிறது – சிங்காரவேலன்

Share

’லிங்கா’ பிரச்னை தொடர்பாக சிங்காரவேலனை ரசிகர்கள் என்ற போர்வையில் பலர் ஃபோனில் தொடர்பு கொண்டு கெட்ட வார்த்தைகளில் அர்ச்சித்து வருகிறார்களாம். “ரஜினி ரசிகர் மன்றத் தலைமையே தூண்டி விட்டு இவர்கள் திட்டுகிறார்கள். இந்த பிரச்னையெல்லாம் தெரியாமலேயே ஒரு ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர் ஒருவர் எனக்கு ஃபோன் செய்து, “உங்களுக்கும் தலைமைக்கும் எதுவும் பிரச்னையா சார்? உங்க நம்பரை அனுப்பி திட்டச் சொன்னாங்க” என்று கேட்டார். தினமும் ஏராளமானோர் இப்படி அழைத்து அசிங்க அசிங்கமாகத் திட்டுகிறார்கள். விரைவிலேயே காவல்துறையில் […]

Share

தமிழ்த் திரையுலகில் நஷ்டமே தராத ஒரே நடிகர் விஜய் மட்டுமே – சிங்காரவேலன்

Share

லிங்கா பிரச்னை தொடர்பாக சிங்காரவேலன் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியது குறித்து முந்தைய செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். (தொடர்புடைய செய்தி : http://128.199.158.50/?p=5812) சிங்காரவேலன் விஜய்யை சந்தித்த போது விஜய் நடிக்கும் புலி திரைப்படத்தில் பணி புரியும் அனைவருக்கும் பிரியாணி விருந்து வழங்கப்பட்டிருந்திருக்கிறது. சிங்காரவேலனையும் விருந்தில் கலந்து கொள்ளச் சொல்லியிருந்திருக்கிறார் விஜய். இது குறித்து நம்மிடம் பேசிய சிங்காரவேலன், “படத்தில் பணி புரிந்த தொழிலாளர்களுக்காக விருந்து கொடுத்தார் விஜய்.  பணக்காரர்களுக்கு அல்ல. தமிழ்த் திரையுலகில் நடிகர் விஜய் ஒருவர் தான் […]

Share

புலி விநியோக உரிமை : வதந்திகளை நம்ப வேண்டாம் – சிங்காரவேலன்

Share

‘லிங்கா’ திரைப்படத்தின் திருச்சி – தஞ்சை விநியோகஸ்தரான சர்ச்சைக்குரிய சிங்காரவேலன் சமீபத்தில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். “லிங்கா பிரச்னையில் அவர் பெயரையும் சம்பந்தப்படுத்தி சில பத்திரிகைகள் எழுதியிருந்தன. அது குறித்து அவர் வருத்தப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். எனவே தான் அவரை நேரில் சந்தித்தேன். மற்றபடி ‘புலி’ திரைப்படத்தின் விநியோக உரிமையையெல்லாம் பெறவில்லை. வதந்திகளை நம்பாதீர்கள்” என்கிறார் சிங்காரவேலன். நடிகர் விஜய்யை சிங்காரவேலன் நேரில் சந்தித்த தினத்தன்று, நடிகர் விஜய் தனது அடுத்த படமான ‘புலி’ திரைப்படத்தில் பணியாற்றும் […]

Share

சிங்காரவேலன் & நடிகர் விஜய் திடீர் சந்திப்பு

Share

‘லிங்கா’ திரைப்பட திருச்சி – தஞ்சை விநியோகஸ்தர் சிங்காரவேலனும், நடிகர் விஜய்யும் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிங்கா பிரச்னையில் இரண்டு முக்கிய நடிகர்கள், பணம் தரக்கூடாது என்று சூப்பர் ஸ்டாரிடம் கூறியதாக கடந்த வாரம் சிங்காரவேலன் பகிரங்க குற்றச்சாட்டு கூறியிருந்தார். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் நடிகர் விஜய் தான் என்று பலரும் யூகங்களைக் கிளப்பி விட்டுக் கொண்டிருந்தனர். ஐந்து நாட்களுக்கு முன்பு சரத்குமாரை சந்தித்துப் பேசியிருந்தார் சிங்காரவேலன். இந்நிலையில் நடிகர் விஜயையும் அவர் […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme