Share

1

“ஐயகோ, என்னைக் கருணாநிதி என்று அழைக்கிறார்களே” என்று புலம்பியவர் கருணாநிதி. அதாவது தட்சிணாமூர்த்தி என்ற தனது பெயரை தனக்குத் தானே கருணாநிதி என்று மாற்றி வைத்துக் கொண்டாலும் அந்தப் பெயரில் தன்னை யாரும் அழைக்கக் கூடாது என்பதற்கான புலம்பல் அது.

கடந்த சில நாட்களாக தமிழக முதலமைச்சரிடம் அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டு வம்பு செய்து கொண்டிருக்கும் கருணாநிதி இன்றைக்கு வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், தமிழக முதலமைச்சரை ‘உனக்குத் தைரியம் இருந்தால் பேரவையில் நான் அமருவதற்கேற்ற இடத்தினை ஏற்பாடு செய்து விட்டு தகவல் அனுப்பவும்’ என்று ஒருமையில் ட்வீட்டியிருக்கிறார்.

அதே போல, “பன்னீர்செல்வம் என்று உங்களுக்குப் பெயர் இருப்பதைப் பார்த்து, ஒரு காலத்தில் உங்களைப் பற்றிய நல்ல எண்ணம் எனக்கு இருந்தது.  கறுப்புக் கலரிலே உள்ள ஒருவருக்கு “வெள்ளையன்” என்று பெயர் வைப்பதைப் போன்றதுதான் என்பது இப்போது தான் எனக்குப் புரிகிறது. சட்டசபையில் எனது வாதத்தைக் கேட்டு அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களே மறுநாள் வந்து பதில் கூறுவதாகச் சென்றதை மறந்துவிட வேண்டாம்!” என்றெல்லாம் ட்வீட்டியிருக்கிறார்.

தமிழக முதலமைச்சரை ஒருமையில் அழைத்திருப்பது தான் கருணாநிதியின் நாகரிகம்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/NR0Xp