Month: November 2014

கத்தி திரைப்பட பிரச்னை : எதிர்ப்பாளர்களுக்கு நீதிமன்றம் விளாசல்

Share

முருகதாஸ் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பு அதன் தயாரிப்பு நிறுவனமான ‘லைக்கா’வின் பெயரை படத்தின் விளம்பரங்கள், போஸ்டர்கள், திரைப்படத்தில் கூட பயன்படுத்தக்கூடாது என்று சில அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின.படம் வெளியிடப்படுவதற்கு முன் தினம் நள்ளிரவில் சென்னையில் சில திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.வேறு வழியின்றி தமிழகத்தில் மட்டும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இல்லாமல் படம் வெளியானது. தங்கள் நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களிலும், படத்திலும் உபயோகப்படுத்த அனுமதி அளிக்கக்கோரி லைக்கா […]

Share

கருணாநிதியின் நாகரிகம்

Share

“ஐயகோ, என்னைக் கருணாநிதி என்று அழைக்கிறார்களே” என்று புலம்பியவர் கருணாநிதி. அதாவது தட்சிணாமூர்த்தி என்ற தனது பெயரை தனக்குத் தானே கருணாநிதி என்று மாற்றி வைத்துக் கொண்டாலும் அந்தப் பெயரில் தன்னை யாரும் அழைக்கக் கூடாது என்பதற்கான புலம்பல் அது. கடந்த சில நாட்களாக தமிழக முதலமைச்சரிடம் அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டு வம்பு செய்து கொண்டிருக்கும் கருணாநிதி இன்றைக்கு வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், தமிழக முதலமைச்சரை ‘உனக்குத் தைரியம் இருந்தால் பேரவையில் நான் அமருவதற்கேற்ற இடத்தினை ஏற்பாடு […]

Share

காங்கிரஸில் குஷ்பு

Share

“வேலை வெட்டி இல்லாத முட்டாள்கள் என்பதை சிலர் மீண்டும் நிருபித்திருக்கிறார்கள். நான் எந்தக் கட்சியிலும் சேருவதாக இல்லை. அப்படி வரும் அடிப்படை உண்மை இல்லாத வதந்திகளை நம்பாதீர்கள்” – இப்படி ஒரு ட்வீட்டை வெளியிட்டவர் நடிகை குஷ்பு. வெளியிட்ட அடுத்த 50 மணி நேரத்தில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் சோனியா காந்தியைச் […]

Share

கிரானைட் முறைகேடு : மதுரையில் மட்டும் விசாரணை – நீதிமன்றம் உத்தரவு

Share

கனிம வளக் கொள்ளை தொடர்பாக தான் மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரிக்க வேண்டுமா, அல்லது தமிழகம் முழுவதும் விசாரிக்க வேண்டுமா என்பதை தெளிவு படுத்தும்படி உயர் நீதி மன்றத்தில் சகாயம், ஐ.ஏ.எஸ். கடந்த வாரம் மனு கொடுத்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை  இன்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று நடந்தது. ”கிரானைட் முறைகேடு என்பது மிகப்பெரிய விவகாரம். மிகப்பெரிய அளவில் கனிம […]

Share

RTI-யின் கீழ் மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறார் மோடியின் மனைவி

Share

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென் மத்திய அரசிடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விளக்கம் ஒன்றைக் கேட்டுள்ளார். “நான் பிரதமரின் மனைவி. எனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு எந்த வகையானது என்பது குறித்தும், எனது பாதுகாவலர்களது விபரங்களையும் எனக்குத் தெரியப்படுத்துங்கள். பிரதமரின் மனைவி என்ற வகையில் பாதுகாப்பைத் தவிர வேறு எந்த வகையான வசதிகள் எனக்குக் கிடைக்கும் என்பதையும் தெரியப்படுத்தவும்” என்றும் அவர் விளக்கம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார். ‘முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரின் பாதுகாவலர்கள் […]

Share

அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம் – கருணாநிதி குறித்து முதல்வர் ஓ.பி.எஸ். விளாசல்

Share

திமுக தலைவர் கருணாநிதியை சமீபத்தில் செய்தியாளர் ஒருவர்,  “சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.  தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டாமல் இருந்து வருகிறது” என தெரிவித்ததாகவும், அதற்கு கருணாநிதி, “சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. சட்டப்பேரவை பற்றியோ, சட்டப்பேரவைக் கூட்டங்கள் பற்றியோ அல்லது சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்பது பற்றியோ பேசுவதற்கு ஒரு சிறிதளவேனும் அருகதை உள்ளவரே அதைப்பற்றி பேசலாம். சட்டப் பேரவைக்கே வராதவர் சட்டப்பேரவை […]

Share

உயர்நீதிமன்றத்தில் சகாயம், ஐ.ஏ.எஸ். மனு

Share

  கனிம வளம், தாதுப் பொருட்கள் முறைகேடு சம்பந்தமாக சகாயம், ஐ.ஏ.எஸ். தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரணையை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழக அரசின் சார்பில் அவருக்கு மதுரை மாவட்டத்தில் நடந்த கனிமவள முறைகேடுகள் குறித்து விசாரணை செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. எனவே, “மதுரை மாவட்டத்தில் நடந்த கனிமவள முறைகேடு தொடர்பாக மட்டும் விசாரணை நடத்த வேண்டுமா, அல்லது தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் நடந்த […]

Share

சாகித்திய அகாதமியே.. சரி தானா?

Share

மரியாதைக்குரிய சாகித்திய அகாதமி பொறுப்பாளர்களுக்கு வணக்கம், 16.11.2014-ம்  தேதியன்று  தேசீய புத்தக வாரம் – சாகித்ய அகாதமி புத்தகக் கண்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் “எனது கவிதைகளும் நானும்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்த அழைக்கப்பட்டேன். சாகித்ய அகாதமியின் மேல் நான் வைத்திருக்கும் பெருமதிப்பின் காரணமாக அந்த அழைப்பை ஏற்று நானும் சென்றிருந்தேன். அறிமுக உரையின்போது, மரியாதைக்குரிய ஐசக் சாமுவேல் அவர்கள் கண்ணதாசன், மு. மேத்தா, வைரமுத்து போன்றவர்களின் வழித்தோன்றலில் வந்த மாந்திரீகக் கவிஞன் என்.டி. ராஜ்குமார் இப்போது […]

Share

அரசியலுக்கு வருவது ஈஸி – சூப்பர் ஸ்டார் ரஜினி

Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘லிங்கா’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் கோலாகலமாக நடந்தது. படத்தின் சேட்டிலைட் உரிமைகள் ஜெயா டிவிக்கு விற்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள், திரையுலகப் பிரமுகர்கள் என்று ஏராளமானோரின் உற்சாக வெள்ளத்தில் நடந்தேறிய நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள் : மிர்ச்சி சிவா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார் புதிய ட்ரைலர் திரையிடப்பட்டது. அட்டகாசமான அந்த ட்ரைலரைக் கண்ட அனைவருமே ஒன்ஸ்மோர் கேட்க அதிர்ந்தது அரங்கம். சூப்பர் ஸ்டார் ரஜினி, […]

Share

பல கோடி ரூபாய் கேட்டு என்னை மிரட்டுகிறார்கள் – விஜய் சேதுபதி அறிக்கை

Share

தமிழ் திரையுலக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழ் திரை உலகிற்கும், எனக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக்கம்.ஆர்.கே.சுரேஷின் ’ஸ்டுடியோ 9’ என்ற நிறுவனத்தில் ‘வசந்தகுமாரன்’ என்ற திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மையே.ஆனால் ஆர்.கே.சுரேஷின் தவறுதலான நடவடிக்கைளின் காரணமாகவும், அவரின் தகாத வார்த்தைகளின் காரணமாகவும் நான் அந்தத்  திரைப்படத்திலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே விலகிக் கொள்வதாகவும், நான் வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ. 9 லட்சத்தை வட்டியுடன் சேர்த்துத்  தருவதாகவும் […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme