Month: August 2014

’அந்த’ வாழ்த்தை அவரு சொல்லலையாம்!

Share

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொன்னதாக அவருடைய அதிகாரப்பூர்வ ட்வீட்டர், ஃபேஸ்புக் கணக்குகளிலிருந்து நேற்று முன் தினம் வாழ்த்துச் செய்தி வெளியாகியிருந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவலாக ‘பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி’ என்று கிண்டலடிக்கப்பட்டது. “எங்கள் தலைவர் வாழ்த்து சொல்லுகிறார். அதில் என்ன தவறு” என்று திமுகவினர் சப்பைக்கட்டெல்லாம் கட்டினார்கள். ஆனால் இன்று, “அந்த அறிக்கை ஸ்டாலின் சமூக வலைதளங்களை பராமரிப்பவர்கள் அவருடைய அனுமதியின்றி வெளியிட்டு விட்டார்கள்” என்று திமுக தரப்பிலிருந்து அறிக்கை […]

Share

பெருச்சாழி – மெஹா ஹிட்

Share

’அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படத்தை இயக்கியவர்.. ‘கல்யாண சமையல் சாதம்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்தவர் அருண் வைத்யநாதன். மயிலாடுதுறைக்குப் பக்கத்தில் சீர்காழியைச் சேர்ந்த அவரின் இயக்கத்தில் இன்று ரிலீஸாகியிருக்கும் மலையாளத் திரைப்படம் – பெருச்சாழி. மோகன்லால் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் அரசியல் நையாண்டி திரைப்படம். வெளியான முதல் நாளே ரசிகர்கள் மட்டுமின்றி ஊடகங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு ஒரு முழு நீள ‘மோகன்லால் ஸ்டைல்’ சூப்பர் திரைப்படம் என்று ரசிகர்கள் பேரானந்தத்துடன் கொண்டாடுகிறார்கள். […]

Share

பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி #லேட்டஸ்ட்

Share

  பல்லாண்டு காலமாக எதுவுமாக இல்லாமல், சமீப காலமாக தொலைக்காட்சி சேனலுக்கு வருமானம் வேண்டுமென்பதால் ‘விடுமுறை தின சிறப்பு’ வாழ்த்துகள் என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்தவர்களின் லேட்டஸ்ட் பரிணாம வளர்ச்சி. ‘இனிய விநாயக சதுர்த்தி தின வாழ்த்துகள் இப்படிக்கு – மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர்’ பின்குறிப்பு : ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு திருமண தினத்தன்று நெற்றியில் குங்குமத்துடன் காட்சியளித்ததெல்லாமும் இந்த பரிணாம வளர்ச்சியில் சேர்த்துக் கொள்ளலாம்.

Share

மாறன் சகோதரர்கள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

Share

திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக பதவி வகித்தபோது, ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, அவருடைய பங்குகளை  மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த விற்பனை மூலம் கிட்டத்தட்ட 550 கோடி ரூபாய் சன் குழும நிறுவனங்களுக்கு கை மாறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இன்று குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சன் டைரக்ட் டிவி பிரைவேட் லிமிடேட் நிறுவனம் ஆகியவர்கள் […]

கல் கேபிள் நிறுவன லைசன்ஸ் ரத்து – மத்திய அரசு அதிரடி

Share

சன் டி.வி.யின் நிறுவனர் கலாநிதி மாறனின் தாயார் மல்லிகா மாறன் மற்றும் டி.கே. எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான, சென்னையில் இயங்கி வரும் கல் கேபிள் நிறுவனம் மற்றும் தஞ்சையில் இயங்கி வரும் காவிரி டிஜிடல் நெட்வொர்க்ஸ் ஆகியவற்றின்   ஒளிபரப்பு லைசன்ஸை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் சென்னையில் கல் கேபிள்  நிறுவனம் தனது சேவையை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை கல் கேபிள் நிறுவனம் தனது […]

Share

பிரபல தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி சிபிஐ-யால் கைது?!

Share

பிரபல தொழிலதிபரும், கல்வியாளருமான எம்.ஏ.எம். ராமசாமி இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவருடன் கம்பெனிகள் பதிவாளர் மனுநீதிச் சோழனும் கைது செய்யப்பட்டுள்ளார். எம்.ஏ.எம். ராமசாமியை அவருக்குச் சொந்தமான அனைத்து நிறுவனங்களின் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதற்காக பொதுக்குழு தீர்மானம் எடுக்கப்பட்டது. அது செல்லாது என்று அறிவிக்கக் கோரி கம்பெனிகள் பதிவாளரிடம் பத்து லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார் எம்.ஏ.எம். ராமசாமி. லஞ்சப் பணம் கொடுக்கும் போது இருவரையும் கையும், களவுமாக சி.பி.ஐ. அதிகாரிகள் பிடித்துள்ளனர். ஜனதா […]

Share

என்னது, காந்தி செத்துட்டாரா?!

Share

‘காந்தி’ திரைப்படத்தை டைரக்ட் செய்த ரிச்சர்ட் அட்டன்பரோ கடந்த ஞாயிறன்று காலமானார். உலகெங்கிலும் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. அந்தக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘ஜனசக்தி’யில்,  ‘காந்தியாக நடித்த அட்டன்பரோ மறைவு’ என்று தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில் அவர் அந்தப் படத்தின் இயக்குநர் தான். காந்தியாக அந்தப்படத்தில் நடித்த பென் கிங்க்ஸ்லி இன்னமும் நலமுடன் இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இறங்கற்செய்தியிலேயே இந்தப் பிழை இருக்கிறதா, அல்லது […]

Share

பட்டையைக் கிளப்பும் Xiaomi Mi3 மொபைல் ஃபோன் விற்பனை

Share

சமீபமாக ஸ்மார்ட் ஃபோன் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது ஒரு சீனத் தயாரிப்பு நிறுவனம். பொதுவாகவே,சீனத் தயாரிப்பு மொபைல் ஃபோன்கள் என்றாலே விலை குறைவு. அதற்கேற்ப தரமற்றவை என்ற பெயர் உண்டு. ஆனால் ஷியவோமி (Xiaomi) என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஃபோன்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிறுவனத்தின் Mi3 மாடல் ஆண்ட்ராய்ட் ஃபோன் பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் கிளப்பியுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனகான ஃப்ளிப்கார்ட் உடன் […]

செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme