Month: June 2014

தமிழில் பெயர் வெக்கணும்னா ஒரு நாள் டைம் கொடுங்கப்பா – மு.கருணாநிதி

Share

  திமுக தலைவர் மு. கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனின் தம்பி ராமதாஸ் மகன் திருமணம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மணமகனின் பெயர் விக்ரம். மணமகள் நிஷாந்தி. திருமணத்தில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, “இது தமிழ் திருமணம் (?!). பெயர்கள் தமிழிலேயே இருக்க வேண்டும். நாம் இப்போது விட்டால் பிறகு தமிழை யாராலும் காப்பாற்ற முடியாது. இப்போது தான் புயல் இந்தியாவில் வீசி தமிழகத்திற்கு வந்திருக்கிறது. அந்தப் புயலை தடுத்து நிறுத்த வேண்டும். பெயர்களை தமிழ்ப் […]

Share

மெளலிவாக்கம் – விதிமீறல்கள் உள்ளன – முதல்வர் அறிவிப்பு

Share

சென்னை மெளலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டடத்தை இன்று நேரில் பார்வையிட்டார் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா. அங்கு நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகள் முதல்வரிடம் விளக்கினர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் இருந்தனர். ஆந்திராவின் விஜயநகரம் மற்றும் நெல்லூர் மாவட்ட கலெக்டர்களும் சம்பவ இடத்தில் உள்ளனர்.   பிறகு காயமடைந்தவர்கள் 19 பேர் அனுமதிக்கப்பட்டுள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பிறகு […]

Share

தனியார் பெயரில் பதியப்பட்டுள்ள அரசு இணைய தளம். செலவு 5 லட்சம் ரூபாய்?

Share

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்குவது தொடர்பாக 1981-ம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் மாநாட்டின்போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதன்படி 1986-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் சங்கம் தொடங்கப்பட்டது. மதுரை தல்லாகுளத்தில் இந்த சங்கத்துக்காக 14.15 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தை சிறப்புடன் நிர்வகிக்க தனி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, சங்கப் பணிகள் சிறப்புடன் நடந்து வருகின்றன. உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு […]

Share

மெளலிவாக்கம் கட்டடம் – அனுமதி அளித்த அரசு உயர் அதிகாரிகள் கைது இல்லையா?

Share

  ஒரு சாதாரண மழைக்கே தாக்குப் பிடிக்க முடியாமல் சரிந்து விட்ட சென்னை மெளலிவாக்கம் கட்டடம் ஏன் விழுந்தது என்று ஆளாளுக்கு இப்போது ஆராய்ச்சி செய்து  கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் மதுரையை தலைமையிடமாகக் கொண்டது. ஏற்கனவே அங்கே சில அபார்ட்மெண்ட்டுகளும், ஹோட்டலும் கட்டியிருக்கிறார்கள். சென்னையில் இது தான் அவர்களுடைய முதல் கட்டுமானப் பணி என்று கூறப்படுகிறது. இரண்டு அடுக்கு மாடிக் கட்டடங்களை கட்ட அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் போரூர் ஏரி இருக்கும் இடத்திற்கு வெகு அருகாமையில். […]

Share

சென்னையில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து

Share

சென்னை போரூர் – குன்றத்தூர் சந்திப்பு அருகில் உள்ள மெளலிவாக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த இரண்டு அடுக்கு மாடிக் கட்டடங்களில் ஒன்று,  இன்று மாலை  சுமார் 5 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. மொத்தம் 13 மாடிகள் கொண்ட அந்த கட்டடம் இன்னமும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. ஆனாலும் ஏற்கனவே முழுமையடைந்த பகுதிகளில் அண்மையில் தான் மக்கள் குடி புகுந்துள்ளனர். இன்று மாலை சென்னையில் பெய்த மழைக்கே தாக்கு பிடிக்க முடியாமல் அந்தக் கட்டடம் இடிந்து […]

Share

தீப்பிடித்து எரிந்த இண்டக்‌ஷன் ஸ்டவ் : எச்சரிக்கை ரிப்போர்ட்

Share

வீட்டில் ஏற்படும் தீ விபத்துகளில் பெரும்பான்மையானவை கேஸ் சிலிண்டர் அடுப்புகளால் ஏற்படுபவை தான். ‘இண்டக்‌ஷன் ஸ்டவ்’ எனும் நவீன வகை அடுப்புகளில் இந்தப் பிரச்னை கிடையாது என்று சொல்லியே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், திருச்சியைச் சேர்ந்த விஜயராகவன் என்பவர் வீட்டில் நேற்று பிரபல நிறுவனம் ஒன்றின் இண்டக்‌ஷன் அடுப்பு திடீரென தீப்பிடித்து எரிந்திருக்கிறது. “நான் ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். என் மனைவி சமையலறையில் இண்டக்‌ஷன் அடுப்பில் சமைத்துக் கொண்டிருக்கும் போது நடுவில் அடுத்த அறைக்கு சென்றிருந்த போது, […]

Share

கார்ட்டூனிஸ்ட் பாலா vs லீனா மணிமேகலை

Share

குமுதம் நிறுவனத்தாருக்கு.. வணக்கம். என் பெயர் லீனா மணிமேகலை. கவிஞராகவும் திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். தங்கள் நிறுவனத்தில் பணி செய்யும் கார்டூனிஸ்ட் பாலா, சமூக வலை தளங்களில் மிக மோசமான மொழியில் என்னைக் குறித்து பதிவுகள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். அவரை நான் சந்தித்ததும் இல்லை, பேசியதும் இல்லை. குமுதத்தில் அவர் கார்ட்டூன்களைப் பார்த்திருக்கிறேன். ஏக மொழியில் விபசாரி, வியாபாரி என்றும் ஊடகத் தலைமையுடன் ஜெயமோகன் சொன்னதுபோன்ற பல “உத்திகளை” கையாண்டு என் திரைப்படங்கள் குறித்து எழுத வைப்பதாகவெல்லாம் எழுதியிருக்கிறார். […]

Share

தமிழக ஆளுநராகிறார் ஜஸ்வந்த் சிங்?

Share

பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங், தமிழகத்தின் ஆளுநராக விரைவில் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவில் போட்டியிட இடம் கொடுக்காததால், ராஜஸ்தானில் பார்மர் தொகுதியிலிருந்து சுயேட்சையாகப் போட்டியிட்டார் ஜஸ்வந்த் சிங். 87,461 வோட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் ஆதரவு கவர்னர்களை தானாகவே பதவி விலகிச் செல்லும்படி கேட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் தமிழகம் இல்லை. […]

Share

கானல் நீரா… இலங்கை ஏதிலியரின் மருத்துவக் கல்வி கனவுகள்?

Share

ஈரோடு அரச்சலூர் இலங்கை ஏதிலியர் முகாமில் வசிக்கும் ராஜா என்ற பெயிண்டரின் மூத்த மகள் நந்தினி. நடந்து முடிந்த +2 தேர்வில் 1,170 மதிப்பெண்கள் எடுத்த நந்தினியின் மருத்துவ கட்-ஆஃப் மதிப்பெண்கள் 197.5 சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் நேற்று சனிக்கிழமை நந்தினிக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு – கவுன்சிலிங் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு மட்டும் அதற்கான அழைப்பு வரவில்லை. ஆனாலும் அழைப்பு இல்லாதவர்களும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம் என்பதால் நேரில் சென்ற நந்தினிக்கு […]

Share

கருணாநிதியை நம்ப மக்கள் எக்காலத்திலும் தயாராக இல்லை – முதல்வர் ஜெயலலிதா அறிக்கை

Share

பாலாறு நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு முதல்வர் ஜெ. ஜெயலலிதா  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருணாநிதியின் மற்ற அறிக்கை போல், இந்த அறிக்கையும் தமிழக மக்களை ஏமாற்றும் செயல். கருணாநிதியை நம்ப மக்கள் எக்காலத்திலும் தயாராக இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதுகோட்டை விட்டுவிட்டு தற்போது மனக்கோட்டை கட்டுகிறார். ஆட்சி அதிகாரம் இழந்தநிலையில், எதையோ நினைத்து மனக்கோட்டை கட்டுவதுபோல் உள்ளது கருணாநிதியின் அறிக்கை. பாலாற்றில் குறுக்கே அணை […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme