Month: May 2014

கழகத் தலைவரா, நிறுவனத் தலைவரா, பொதுச் செயலாளரா? – கேப்டன் கன்ஃப்யூஷன்!

Share

தேமுதிகவிற்கு கேப்டன் விஜயகாந்த் கழகத் தலைவரா, பொதுச் செயலாளரா, நிறுவனத் தலைவரா? அந்தக் கட்சியினருக்கே இந்த விஷயத்தில் அந்தக் கட்சித் தொண்டர்கள் இல்லை, அவருக்கே குழப்பம் இருக்கிறது போல! அந்தக் கட்சியின் இணைய தளம் அவரை நிறுவனத் தலைவர் என்கிறது. அவர் பிரதமருக்கு ‘தமிழில்’ எழுதி அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் ‘பொதுச் செயலாளர்’ என்று அச்சடிக்கப்பட்டு அவரும் கையெழுத்திட்டுள்ளார்.   கட்சியின் சார்பில் வரும் 4-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்திற்கான அறிவிப்பில் ’கழக […]

Share

முந்தைய ஆட்சியின் அனைத்து அமைச்சர் குழுக்களும் கலைப்பு – மோடி அதிரடி

Share

மத்தியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட அனைத்து அமைச்சர்கள் குழுக்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலைத்துள்ளார்.பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக முடிவுகளை விரைவாக எடுப்பதற்காக அதிகாரம் அளிக்கப்பட்ட 9 அமைச்சர்கள் குழுக்களும், தேவைப்படும் விவகாரங்களில் விசாரணை நடத்தி அமைச்சரவைக்கு பரிந்துரை அளிக்க 21 அமைச்சர்கள் குழுக்களும் உருவாக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தையும் கலைத்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.மேற்கண்ட குழுக்களின் பரிசீலனையில் இருந்த விவகாரங்கள் தொடர்பாக இனி அந்தந்த அமைச்சகங்களே முடிவுகளை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அமைச்சரவை செயலர் மற்றும் […]

Share

பிரதமருக்கு விஜயகாந்த் தமிழில் கடிதம்!

Share

பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். ”மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களே..” என்று ஆரம்பித்து மூன்று பக்கங்களில் இருக்கும் அந்தக் கடிதம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இதோ அந்தக் கடிதம் :

Share

உனக்கு பிரச்னையில்லைல்ல? – செய்தியாளரிடம் அகிலேஷ் யாதவ் பாய்ச்சல்

Share

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த நான்கு நாட்களில் இரண்டு கற்பழிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. படுவான் கிராமத்தில் இரண்டு பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்… அவருடைய சொந்த ஊரான எடவா கிராமத்திலும் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்தெல்லாம் அகிலேஷ் யாதவிடம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம், “உங்களுக்கு ஒண்ணும் பிரச்னையில்லையில்ல? அப்புறம் ஏன் இந்தக் கேள்வி?” என்று பதில் கேள்வி […]

Share

பள்ளிக்கூட இடத்தை ஆக்கிரமித்தாரா திமுக-வின் ஆர்.எஸ். பாரதி?

Share

நடந்து முடிந்த ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு  தோல்வியுற்ற ஆர்.எஸ். பாரதி, சென்னை மாநகராட்சி பள்ளிக்கூட இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாக மாநகராட்சி கவுன்சிலர் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு உரிய ஆய்வுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் சைதை துரைசாமி கூறினார். சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது, 161வது வார்டு கவுன்சிலர் வேம்பரசன், ”ஆலந்துார் மண்டலத்தில் ஏகாம்பர டபேதார் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சொந்தமான இடத்தின் பெரும்பகுதியை, முன்னாள் […]

Share

டெல்லி பல்கலைக்கழக ஊழியர்கள் சஸ்பெண்ட் – திரும்பப் பெற ஸ்ம்ரிதி இரானி வலியுறுத்தல்

Share

    மத்திய இணை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கடந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி கல்வித் திட்டத்தில் பி.ஏ. பாடப்பிரிவில் சேர்ந்தாராம். ஆனால் படிப்பைத் தொடரவில்லை என்று ஹிந்தி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ம்ரிதி இரானியின் கல்வித் தகுதி குறித்து பலத்த சர்ச்சை கிளப்பி விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கல்வி, மதிப்பெண்கள் குறித்த ரகசிய தகவல்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம். ஸ்ம்ரிதி இரானியின் கல்வி விபரங்களை எடுத்து வெளியிட்டதற்காக […]

Share

ஏர் ஆசியா : பெங்களூரு – சென்னை ரவுண்ட் ட்ரிப் : ரூ. 829 மட்டுமே

Share

வரும் ஜூன் 12-ம் தேதி முதல் பெங்களூரு – கோவா இடையே உள்நாட்டு விமான சேவையை துவக்க உள்ள ஏர் ஆசியா நிறுவனம் வரும் ஜூலை 19-ம் தேதி முதல் சென்னை – பெங்களூரு இடையேயும் விமான சேவையைத் துவக்க உள்ளது. தினமும் காலை 5.55 மணிக்கு பெங்களூருவிலிருந்து கிளம்பி 6.55 மணிக்கு சென்னை வரும் விமானம், மீண்டும் 7.30க்கு சென்னையிலிருந்து கிளம்பி, 8.30க்கு பெங்களூருவை அடையும். அதே போல மாலை 6.35க்கு பெங்களூருவிலிருந்து கிளம்பி 7.35க்கு […]

Share

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி – சென்னையில் இருவர் கைது

Share

நெதர்லாந்தின் கட்டுமானப் பணி  நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 30 பேரிடம் மருத்துவப் பரிசோதனைக்காக தலா 5,000 ரூபாய் வசூலித்தாக சென்னையில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவுக்கான நெதர்லாந்து தூதர் தங்கள் நாட்டில் மேற்படி நிறுவனத்தில் அப்படி எதுவும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும், ஆனால் அவர்கள் பெயரைப் பயன்படுத்தி இங்கே மோசடி நடைபெறுவதாகவும் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த வேலைவாய்ப்பு நிறுவனம் […]

Share

2ஜி ஊழல் : வாக்குமூலத்தில் முரண்பாடு – 1 லட்சம் அபராதம்

Share

2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வா சாட்சியம் அளித்த போது 600–க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு முரண்பாடான வாக்கு மூலத்தையும் முறையற்ற பதில்களையும் அளித்து இருந்தார். அவர் ஏற்கனவே சிபிஐ விசாரணையின் போது அளித்த வாக்கு மூலத்துக்கும், கோர்ட்டில் தெரிவித்த பதில்களுக்கும் நிறைய முரண்பாடுகள் இருந்தன. இதனால் கோபம் அடைந்த நீதிபதி சைனி, ஷாகித் பல்வா மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிட்டார். […]

Share

ஏர்டெல் 3ஜி புதிய சலுகை

Share

கடந்த 27-ம் தேதி முதல் ஏர்டெல் 3ஜி ப்ரீபெய்டு ப்ளான்களில் உள்ளவர்கள் ப்ரீபெய்டு முடியும் நாளுக்கு முன்னதாகவே ரீசார்ஜ் செய்தால் 3ஜியில் மீதமுள்ள டேட்டா அடுத்ததாக ரீ சார்ஜ் செய்யும் நாட்களுடன் சேர்த்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 2 GB டேட்டா ப்ளானில் இருந்து இது வரை 1 GB மட்டுமே உபயோகித்திருந்தாலும் குறிப்பிட்ட நாளில் மீதமுள்ள 1 GBயும் உபயோகிக்க முடியாமல் போய்விடும். இனிமேல் அதற்குள் மீண்டும் ரீசார்ஜ் செய்தால் புதிதாகக் கிடைக்கும் 2 […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme