Month: April 2014

தேவையா இது சிரஞ்சீவி?

Share

ஆந்திராவில் இன்று நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலின் வோட்டுப் பதிவின் போது ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத் வோட்டுச் சாவடியில் மத்திய அமைச்சரும், ஆந்திர திரைப்பட நடிகருமான சிரஞ்சீவி, தனது மனைவி, மகன், மற்றும் மகளுடன் வோட்டுப் போட வந்தார். வந்தவர் அங்கே வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் எல்லோரையும் தாண்டி நேரே உள்ளே நுழைய முயன்றார். இதைப் பார்த்த வரிசையில் நின்ற கார்த்திக் என்ற இளைஞர், சிரஞ்சீவியைத் தடுத்து நிறுத்தி, “உங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல்? நீங்க மத்திய […]

Share

மும்பை ஏர்போர்ட் அலட்சியம். கேள்விக்குறியாகும் பாதுகாப்பு!

Share

ஏப்ரல் 25… வெளிநாட்டிலிருந்து மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய லிஜூ வர்கீஸ் என்பவர் அங்கிருந்து நாக்பூர் செல்ல ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்கனவே டிக்கெட் எடுத்திருந்தார். அடுத்ததாக நாக்பூர் செல்ல வேண்டிய விமானத்திற்கு பதிலாக ராஜ்கோட் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தினுள் சென்று அமர்ந்தார். விமானம் ராஜ்கோட்டில் சென்று இறங்கிய பிறகு தான் அவருக்கு அந்த விஷயமே தெரிய வந்திருக்கிறது. அவர் சொன்ன பிறகு தான் ஜெட் ஏர்வேஸூக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததும் தெரியவந்துள்ளது. […]

Share

ரமணா திரைப்பட பாணியில் மருத்துவர்கள் அடித்த கொள்ளை

Share

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் டீலா ஜமால்பூர் என்ற ஊரில் வசித்த 52 வயதான சுஷ்மாவுக்கு கடந்த பிப்ரவரி 2-ம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அங்குள்ள எல்.பி.எஸ். என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் சில மணி நேரங்களிலேயே இறந்திருக்கிறார். எனினும் அவருக்கு பொருத்தியிருந்த செயற்கை சுவாசக் கருவியைக் கழட்டாமல் அவரது உடலை தனி அறையில் வைத்திருந்திருக்கிறார்கள். உறவினர்களையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அவர் இறந்த விபரத்தையும் வெளியிடவில்லை. […]

Share

அலெக்ஸ் பால் மேனன் வங்கிக் கணக்கிலிருந்து பணம் அபேஸ்!

Share

ராய்ப்பூரில் தேர்தல் அதிகாரியாக இருக்கும் தமிழர் அலெக்ஸ் பால் மேனன். இரண்டாண்டுகளுக்கு முன்பு சட்டீஸ்கரில் சுக்மா மாவட்ட கலெக்டராக இருந்த போது மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டார். இது குறித்த செய்தி : சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட தமிழன் அவருடைய வங்கிக் கணக்கின் ஏ.டி.எம். கார்டிலிருந்து கிட்டத்தட்ட 14,000 ரூபாய் எடுக்கப்பட்டிருக்கிறது. எடுக்கப்பட்டுள்ள இடம் தாய்லாந்தின் தலைநகர் பேங்காக்கில் உள்ள MBK செண்டர் எனும் இடத்திலுள்ள ஏ.டி.எம். மையத்தில். ஆனால் அலெக்ஸ் பால் மேனன் தற்போது […]

Share

தயாளு, கனிமொழி, ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Share

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அமலாக்கப் பிரிவு சார்பில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, ராஜ்யசபா திமுக எம்.பி., கனிமொழி, திமுக  தலைவர் கருணாநிதியின் மனைவி இரண்டாவது மனைவி தயாளு அம்மாள் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அன்னிய செலாவணி விதிகள் மீறப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக கலைஞர் டிவி நிறுவனத்திற்கு ஸ்வான் நிறுவனம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.ா

Share

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை : அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம்

Share

ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை 5 முதல் 7 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளிக்கும் என்று  நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்ச நீதிமன்றம் அமர்வு முடிவெடுத்துள்ளது. இது போன்ற வழக்கை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. இந்த 7 பேர் விடுதலை வழக்கில் 7 விதமான விஷயங்களை ஆராய்ந்து தான் முடிவெடுக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பை வழங்க வேண்டும் […]

Share

ஒரு பூரணம் என்று சொல்வார்களே….

Share

பதினாறாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அமைதியாக நடந்து முடிந்தது. கூடவே, ஆலந்தூர் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலும். தமிழகத்தில் மொத்தம் 72.83% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 80.99 சதவிகிதமும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 57.86 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் 73% வாக்குகள் தான் பதிவாகின. கடந்த தேர்தலை விட இந்த முறை 1.34 கோடி வாக்காளர்கள் அதிகம். ”தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு […]

Share

தமிழகத்தில் வாக்கெடுப்பு தொடங்கியது

Share

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது பாராளுமன்றத் தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்கெடுப்பு தொடங்கியது. சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் முதல் நபராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் வாக்கினை பதிவு செய்தார்.

Share

40 தொகுதிகளும் எப்படி? – ஜூனியர் விகடன் கணிப்பு

Share

இன்றைய ஜூவியில் வெளியாகியிருக்கும் ‘நச்’ நிலவரம். பார்ப்போம் தேர்தல் முடிவுகள் என்ன சொல்கின்றன என்று : (முதல் 3 இடங்களைப் பிடிக்கும் கட்சிகள்.. ஜூவி கொடுத்துள்ள வெற்றி வரிசையில்..) திருவள்ளூர் – அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக வடசென்னை – அதிமுக, திமுக, தேமுதிக தென்சென்னை – அதிமுக, பாஜக, திமுக மத்திய சென்னை – திமுக, அதிமுக, தேமுதிக ஸ்ரீபெரும்புதூர் – திமுக, அதிமுக, மதிமுக காஞ்சிபுரம் – அதிமுக, மதிமுக, திமுக அரக்கோணம் – […]

Share

வைகோவுக்கு ஆதரவு – அழகிரி அறிவிப்பு

Share

”விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நண்பர் வைகோவுக்கும் எனக்கும், திமுகவில் ஒரே மாதிரியான அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  மற்றவர்களைக் காட்டிலும் வைகோ மிகச் சிறந்த மக்கள் சேவகர். மக்களுக்கும் இது மிக நன்றாகத் தெரியும். முல்லை பெரியாறு பிரச்சினைக்காக ஆரம்பம் முதல் குரல் கொடுப்பவர். மதுவிலக்கு கோரி நடைப்பயணம் செய்தவர். தமிழக மக்கள் பிரச்னைக்கு பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கக் கூடியவர். அதற்காக நாம் அவருக்கு பம்பரம் சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்” – விருதுநகரில் தனது ஆதரவாளர்களிடையில் […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme