Share

ஆர்யன் தினேஷ்

விஷால் தயாரித்து நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் பிரபல இசையமைப்பாளர்  G.V. பிரகாஷ்குமார்.

இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. அதில் நா. முத்துக்குமார் எழுதியதாகக் கூறப்படும் ‘லவ்லி லேடீஸ்’ என்ற  பாடலின் வரிகள் தன்னுடையவை என்று சிங்கப்பூரில் வசிக்கும் ராப் பாடகர் தினேஷ் ஆர்யன் கனகரத்னம் புகார் கூறியுள்ளார்.

Naan Sigappu Manithanஇலங்கையைச் சேர்ந்த தினேஷ் ஆர்யன், ‘ஆண்ஸ்டடேஜ் ரெகார்ட்ஸ்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். ராப் பாடல்களுக்காக புகழ் பெற்றுள்ள இவர் ஒரு சில தமிழ், தெலுங்கு திரைப்பாடல்களிலும் பாடியுள்ளார். இவருடைய பாடல் வரிகளைத் தான் இவரிடம் கூறாமலும், இவரது பெயரை வெளியிடாமலும் ஜி.வி. பிரகாஷ் உபயோகித்திருக்கிறார் என்று புகார் கூறியுள்ளார்.

“சில மாதங்களுக்கு முன்பு என்னை அழைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், தான் இசையமைக்கும் ஒரு படத்திற்கான பாடலையும், இசையையும் உருவாக்க என்னைக் கேட்டுக் கொண்டார். என்னுடைய புத்தம் புதிய பாடல் ஒன்றை சில மாறுதல்களுடன் தனது படத்திற்கு உபயோகித்துக் கொள்வதாகக் கூறினார். சில நாட்களுக்குப் பிறகு அந்தப் பாடலை  படத்தின் இயக்குநர் விரும்பவில்லை என்றும் கூறினார். ஆனால், ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தின் பாடல்களில் நா.முத்துக்குமார் எழுதியதாகக் கூறப்பட்டுள்ள பாடல் உண்மையில் நான் எழுதியது. ஆனால் நான் குரல் கொடுத்துள்ளதாக மட்டும் வெளியாகியுள்ளது. பாடலைக் கேட்ட போது, அந்தக் குரலும் என்னுடையது அல்ல. என்னுடைய குரலே இல்லாததற்கு என் பெயரையும், ஆனால் என்னுடைய பாடல் வரிகளுக்கு வேறு கவிஞரின் பெயரையும் தந்துள்ளது நியாயமா? அந்தப் பாடலில் ”Young kid in the club” என்று ஆரம்பிக்கும் வரிகள் என்னுடையவை. ஒரு மாபெரும் இசை மேதையின் குடும்பத்திலிருந்து வந்த ஜி.வி. பிரகாஷ் இப்படிச் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. ‘ராப்’ இசை என்றால் என்னவென்று தெரியாமல் பாடப்பட்டுள்ள அந்த குரல் என்னுடையது என்று சொல்வதே சரியல்ல” என்று தினேஷ் ஆர்யன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ்இதற்கு ட்வீட்டரில் பதில் அளித்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், “இது பொய்யான குற்றச்சாட்டு. அந்தப் பாடலை உண்மையில் நா. முத்துக்குமார் தான் எழுதியுள்ளார். பாடலின் மூன்றாவது பகுதியில் வரும் எட்டு வரிகள் மட்டுமே தினேஷ் ஆர்யன் எழுதியது. ஆனாலும் தினேஷின் பெயர் வர வேண்டும் என்பதால் பாடலைப் பாடியவர்கள் பெயரில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் அவரது பெயரையும் பாடல் எழுதியவர் பெயராக படத்தில் இணைக்கச் செய்வேன்.  அந்த முழுப்பாடலுக்கான இசையையும் அமைத்தது நான் தான். தினேஷின் இலங்கை மொபைல் நம்பர் மட்டுமே என்னிடம் உள்ளது. எனவே அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் இந்தக் குற்றச்சாட்டு குறித்து என்னை முதலில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்கலாம். ஆனால் சம்பந்தமே இல்லாமல் பாடல் பாடிய விஜய் பிரகாஷ் குறித்தெல்லாம் அவர் தவறாக தகவல் பரப்பியிருக்க வேண்டாம். அவர் தைரியமாக என்னை நேரில் அழைத்து பேசட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்னகவே புகழ் பெற்ற ‘சுராங்கனி’ பாடலை ரீ-மிக்ஸ் செய்து கடந்த ஆண்டு வெளியிட்டார் தினேஷ் ஆர்யன். (லிங்க் இங்கே : https://www.youtube.com/watch?v=9aJPB_sYUpI)

இதுவே பிறகு விஜய் ஆண்டனி இசையமைப்பில் TN-07-AL4777 திரைப்படத்தில் ‘ஆத்திச்சூடி’ பாடலாக இடம் பெற்ற போது அதில் பாடியவர் தினேஷ் ஆர்யன் தான். அதிலும் இதே சுராங்கனி பாடல் இடம் பெற்றது. அந்தப் பாடலையும்  எழுதியவர் நா. முத்துக்குமார் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது சுராங்கனி பாடலை பல ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்து, இசையமைத்துப் பாடிய சிலோன் மனோகரிடம் முன் அனுமதி பெற்றாரா? என்று சிலர் ட்வீட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதற்கு தினேஷ் ஆர்யனிடமிருந்து இதுவரை பதில் இல்லை.

இதற்கிடையில் ஜி.வி. பிரகாஷிடம் இது குறித்து கேள்வி கேட்ட ட்வீட்டர் பயனாளி ஒருவருக்கு கடுமையான கெட்ட வார்த்தைகளுடன் ஜி.வி. பிரகாஷ் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. பதிலை ட்வீட்டி விட்டு ஒரு சில நொடிகளில் அதனை அவர் நீக்கி விட்டார். ஆனாலும் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துள்ளதாகக் கூறி ட்வீட்டரில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள். அது உண்மையிலேயே ஜி.வி. பிரகாஷ் சொன்னது தானா என்று தெரியவில்லை.

GVPrakash1

முன்னரே ஒரு முறை ட்வீட்டரில் ஒருவரை தனித் தகவலில் (Direct Message) ஜி.வி. பிரகாஷ் அநாகரிக வார்த்தைகளைக் கொண்டு அர்ச்சித்ததாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தினேஷ் ஆர்யன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்த செய்தி :

1

Share
The short URL of the present article is: http://seythigal.in/CgpLP