Share

mohan vargheeseதமிழக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனின் பதவிக் காலம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் 42-வது தலைமைச் செயலாளராக மோகன் வர்கீஸ் சுங்கத் பதவியேற்கிறார்.

2005111001040204[1]சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வரும் மோகன் வர்கீஸ் சுங்கத், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.1956-ம் ஆண்டு திருச்சூரில் பிறந்தவர். 1978-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார். இவரது மனைவி ஷீலா ராணி சுங்கத், தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் இருக்கிறார். தமிழக கைவினைப் பொருள் கழகத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். கணவன், மனைவி இருவருமே ஒரே நாளில் பணியில் சேர்ந்தார்கள்.

தருமபுரி கலெக்டராக பதவியில் இருந்திருக்கிறார் மோகன் வர்கீஸ்.

நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கை விதிமுறைகள் அமலில் இருப்பதால், புதிய தலைமைச் செயலாளரை நியமிக்க தேர்தல் கமிஷனின் அனுமதி தேவை. தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைத்ததை அடுத்து நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

29THSHEELA_GVH6_29_1314270e[1]வரும் 31-ம் தேதி ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்ற பிறகு அவருக்காக தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் அரசு ஆலோசகர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு ஓராண்டு காலத்திற்கோ அல்லது அந்தப் பதவிக்கான தேவை இருக்கும் வரையோ – இரண்டில் எது குறைவோ அது வரை- அந்த தற்காலிக பதவியில் இருப்பார் என்றும் அரசு அறிவித்துள்ளது. ஷீலா பாலகிருஷ்ணனுக்காக தற்காலிக பதவியும் உருவாக்கப்பட்டுள்ளது.  அவரும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் தான்.

Share
The short URL of the present article is: http://seythigal.in/j9FLz