Month: March 2014

நியாயமா ஜி.வி.பிரகாஷ்?

Share

விஷால் தயாரித்து நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் பிரபல இசையமைப்பாளர்  G.V. பிரகாஷ்குமார். இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. அதில் நா. முத்துக்குமார் எழுதியதாகக் கூறப்படும் ‘லவ்லி லேடீஸ்’ என்ற  பாடலின் வரிகள் தன்னுடையவை என்று சிங்கப்பூரில் வசிக்கும் ராப் பாடகர் தினேஷ் ஆர்யன் கனகரத்னம் புகார் கூறியுள்ளார். இலங்கையைச் சேர்ந்த தினேஷ் ஆர்யன், ‘ஆண்ஸ்டடேஜ் ரெகார்ட்ஸ்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். ராப் பாடல்களுக்காக […]

Share

இனம் திரைப்படம் – அனைத்து தியேட்டர்களிலிருந்தும் தூக்கப்படுகிறது!

Share

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி, இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதிசாமி பிரதர்ஸ் தமிழகமெங்கும் வெளியிட்டிருக்கும் ‘இனம்’ என்ற திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இலங்கை பிரச்னை குறித்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இன்று முதல் இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்திலும் திரையிடுவதை நிறுத்தி வைப்பதாக படத்தின் விநியோகஸ்தர் லிங்குசாமி கூறியுள்ளார். […]

Share

ஆர்.பார்த்திபனும் ட்வீட்டரும்…

Share

திரைப்பட நடிகர், இயக்குநர் ஆர். பார்த்திபன்.. ட்வீட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அவர் நேற்று இரவு சுமார் 10 மணியளவில்  ட்வீட்டரில்  பெண் பெயரில் உள்ள ஒருவருக்கு தனது மொபைல் நம்பரை தனித் தகவலாக அனுப்பி தன்னை அழைத்துப் பேசச் சொன்னது தான் அவருக்கு தலைவலியை உண்டு செய்திருக்கிறது. தனித்தகவல் (Direct Message – DM) என்பது சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமே படிக்க முடியும் ட்வீட்டரில். அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பொதுவில் பகிர்ந்துள்ளார் […]

Share

இந்தியா சிமெண்ட் & சென்னை கிங்க்ஸ் பொறுப்பிலிருந்து விலக தோனி விருப்பம்

Share

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும், இந்தியா சிமெண்ட்ஸ் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் விலகுவதாக தோனி, இந்தியா சிமெண்ட்ஸ் தலைவரும், பதவி நீக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் தலைவருமான சீனிவாசனிடம் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் தொடர்பாக முத்கல் கமிட்டி அறிக்கையில் தனது பெயரும் இடம் பெற்றுள்ளதாக வெளியாகும் தகவல்கள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக தோனி கருதுவதாகக் கூறப்படுகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என்றும் […]

Share

மானாடிக் கொண்டும், மயிலாடிக் கொண்டுமல்லவா இருந்தோம்?

Share

பலரும் ‘நிமிர்ந்து நில்’ படத்தைப் பற்றி என்னிடம் பேசினார்கள். நானும் அந்தப் படத்தைப் பார்த்தேன். சகோதரர் சமுத்திரக்கனி திரையில் காட்டியிருப்பது அத்தனையும் நிஜம். இங்கே நேர்மையாக இருப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. மதுரையில் நான் கலெக்டராக இருந்த சமயத்தில், கிரானைட் முதலைகளைப் பற்றி விவசாயிகள் என்னிடம் புகார் செய்தார்கள். அவர்களிடம் நான், ‘தயவுசெய்து இன்னும் 15 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில் நான் இப்போது தலையிட்டால், உடனடியாக என்னை மாற்றிவிடுவார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு […]

Share

தமிழகத்தில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பம்

Share

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்யலாம். மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9ஆம் தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மனுத் தாக்கல் செய்ய வேட்பாளர்கள் நேரில் செல்லவில்லையெனில், நீதிபதி அல்லது நோட்டரி பப்ளிக் முன்னிலையில் […]

Share

விஜயகாந்தின் தம்பி அதிமுகவில் இணைந்தார்

Share

  தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தின் தம்பி பால்ராஜ் மற்றும் பால்ராஜின் மனைவி வெங்கடலட்சுகி ஆகியோர் மதுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Share

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷீலா ராணி சுங்கத்தின் கணவர்

Share

தமிழக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனின் பதவிக் காலம் வரும் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் 42-வது தலைமைச் செயலாளராக மோகன் வர்கீஸ் சுங்கத் பதவியேற்கிறார். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வரும் மோகன் வர்கீஸ் சுங்கத், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.1956-ம் ஆண்டு திருச்சூரில் பிறந்தவர். 1978-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார். இவரது மனைவி ஷீலா ராணி சுங்கத், தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் இருக்கிறார். […]

Share

நகைச்சுவை நடிகை ஆர்த்தி (கணேஷ்) அதிமுகவில்!

Share

பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி (கணேஷ்) இன்று முதல்வர் ஜெ. ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி குருவாயூரில் திருமணம் புரிந்து கொண்ட ஆர்த்தி மற்றும் கணேஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.கருணாநிதி, அவருடைய மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இதோ :

Share

ஐ.பி.எல். : சென்னை, ராஜஸ்தான் அணிகள் தப்பின

Share

IPL போட்டிகள் சிக்கல் இல்லாமல் நடக்க வசதியாக, முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரை, கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ளது. போட்டிகள் தொடர்பான பணிகளை மட்டும் இவர் கவனிப்பார். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, வாரியத்தின் துணைத் தலைவரே தலைவர் பொறுப்பையும் சேர்ந்து கவனிப்பார் என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது. தற்போதைக்கு போட்டியில் விளையாட எந்த அணிக்கும் தடை இல்லை என்றும், எந்த வீரருக்கும் தடை விதிக்கப்படமாட்டாது என்றும் சுப்ரீம் கோர்ட் […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme