Month: February 2014

இலங்கை ஏதிலியருக்கும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு

Share

தமிழக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழ் ஏதிலியர்களுக்கும் விரிவுப்படுத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் முகாம்களிலும், முகாம்களில் இல்லாமல் வெளியில் தங்கியிருந்து உள்ளூர் காவல் நிலையங்களில் பதிவு செய்துள்ள ஏதிலியர்களும் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. 13,289 குடும்பங்களைச் சார்ந்த 34,826 இலங்கைத் தமிழர்கள் பயன் அடைவார்கள்.

Share

சவுக்கு தளத்தை முடக்க நீதிபதி உத்தரவு

Share

 ‘சவுக்கு’ இணைய தளத்தை அடுத்த பத்து நாட்களுக்குள் முடக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சி.டி. செல்வம், சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ”சவுக்கு தளத்தை நடத்துவது யார்?” என்பது குறித்து ஏற்கனவே நீதிபதி விசாரிக்கச் சொல்லி, சென்னை மாநகர காவல்துறை அதன் வடிவமைப்பாளரை கைது செய்தது குறித்த செய்தியும், அதன் பிறகான விசாரணைகளும் வாசகர்கள் அறிந்ததே. முந்தைய செய்திகள் : சவுக்கு இணைய தள வடிவமைப்பாளர் கைது சவுக்கு…சமுதாயத்தின் மிகப்பெரிய எதிரி – நீதிபதி […]

Share

ஊருக்கு உபதேசம் – விகடன் மீது முன்னாள் பெண் ஊழியர் பாய்ச்சல்

Share

”நான் ஒரு பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஷிப்ட் சிஸ்டம் மாற்றினார்கள். புறநகர்ப் பகுதியில் இருக்கும் என் வீட்டருகே அடிக்கடி பல குற்றங்கள் நிகழ்வதுண்டு. மதியம் இரண்டு மணிக்கு வேலைக்குச் சென்று இரவு பத்து மணிக்கு வீடு திரும்பும் பெண்ணை தெருவில் இருக்கும் நாய்கள் கூட குரைத்துத் தான் வரவேற்றன. சற்று வேலை நேரத்தை மாற்றித் தாருங்கள் என்று எவ்வளவோ போராடிப் பார்த்தும் முடியவில்லை. பெண்கள் பாதுகாப்பைப் பற்றி, அது இல்லாமல் கொடூரமாக மரணம் அடைந்தவர்களைப் […]

Share

IT நிறுவனங்களில் பெண்கள் இரவில் பணி புரிய தடை – திமுக கோரிக்கை

Share

திமுகவின் தென்சென்னை மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெ. அன்பழகன் விடுத்துள்ள இன்றைய ட்வீட் தத்துவம் : ”அரசு உடனடியாக கம்ப்யூட்டர் – IT  நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கான இரவு நேரப் பணியை தடை செய்ய வேண்டும். அவர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வேலை பார்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். ட்வீட்டரில் உடனடியாக பல பெண்கள் இந்தக் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ”முதலில் […]

Share

சென்னை IT பெண் ஊழியர் கொலையில் 4 பேர் கைது

Share

சென்னை சிறுசேரியில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கணக்கராகப் பணிபுரிந்த உமா மகேஸ்வரி என்ற பெண்ணைக் கொலை செய்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் நான்கு பேரும் வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது. கொலையான பெண்ணின் செல்ஃபோனை சிம் மாற்றி உபயோகப்படுத்தியிருந்திருக்கிறார்கள். அதனை வைத்து சிபிசிஐடி போலீஸார் அவர்களைப் பிடித்திருக்கிறார்கள். மேலும் ஒருவனை போலீஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Share

பாராளுமன்றத் தேர்தல் 2014 : அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Share

  எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று முதல்வர் ஜெ. ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். ”தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். அதற்கான பல வாக்குறுதிகளையும் அதில் அளித்துள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் : தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி என்பது இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளையும், வெளியுறவுக் கொள்கையையும், நிதிக் கொள்கையையும் பொருத்தே அமைவதால், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க, […]

Share

திமுக & திகவின் துரோகங்கள் – அற்புதம் அம்மாள்

Share

சில விஷயங்களை எல்லாம் பேச வேணாம்னு தான் நினைக்கிறேன். அவ்வளவு துரோகங்கள் இருக்கு அறிவு (பேரறிவாளன்) கதையிலே! ரெண்டு உதாரணங்களை மட்டும் சொல்றேன். கைது செஞ்சப்ப அறிவுக்கு 19 வயசு. டிப்ளோமா முடிச்சு வேலை செஞ்சுக்கிட்டே இன் ஜினியரிங் படிக்கிறதுக்காக சென்னையில் ‘பெரியார் திடலில்’ தங்கியிருந்தான். ஏன்னா அதான் அவனுக்குச் சொந்தக்காரங்க வீடு. நளினியோட தம்பி பாக்கியநாதன் கூட திராவிடர் கழகக்கூட்டங்கள் வாயிலாத்தான் அறிவுக்கு பழக்கம். எந்த இயக்கத்தை எங்க உயிரா நினைச்சோமோ, அந்த திராவிடர் கழகம் […]

Share

நான் குடிகாரன் தான் – மனுஷ்யபுத்திரன் வாக்குமூலம்

Share

சில தமிழ்த் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெறும் மனுஷ்யபுத்திரன் என்பவரின் மது ஒழிப்பு இரட்டை வேடம் குறித்து முகம்மது இக்பால் எனும் வாசகர் ஆதாரங்களுடன் கூறியது குறித்து கட்டுரை வெளியிடுவதற்கு முன் மனுஷ்யபுத்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டிருந்தோம். (முந்தைய கட்டுரை லிங்க்: மனுஷ்யபுத்திரனின் இரட்டை வேடம்) இது வரை அவரிடமிருந்து நமக்கு நேரடியான பதில் வரவில்லை. ஆனால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தான் ஒரு குடிகாரன் தான் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார் அவர். ”நேற்று முன்தினம் […]

Share

’சவுக்கு’ வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்

Share

’சவுக்கு’ இணைய தளத்தை யார் நடத்துகிறார்கள் என்ற விசாரணை  கடந்த சில வாரங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது குறித்த முந்தைய செய்திகள் : http://128.199.158.50/?p=1677 http://128.199.158.50/?p=1834 சவுக்கு தளம் யாரால் நடத்தப்படுகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்று சென்னை மாநகரக் காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டதையடுத்து, நீதிபதி சி.டி. செல்வம், “காவல்துறை இந்த வழக்கை ஒழுங்காக விசாரிக்கவில்லை. வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார்கள்” என்று காவல்துறையினரை கடிந்து கொண்டார். இதையடுத்து, சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகரனை வரவழைத்த நீதிபதி, […]

Share

மனுஷ்யபுத்திரனின் இரட்டை வேடம்

Share

மனுஷ்யபுத்திரன் என்பவர் அடிக்கடி பல தமிழ்த் தொலைக்காட்சி விவாதங்களில் தென்படுபவர். அண்மையில் மது போதைக்கு அடிமையானவர்கள் அமைப்பு ஒன்றில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். அதனைப் பார்த்து விட்டு முகம்மது இக்பால் என்ற வாசகர் மனுஷ்யபுத்திரனிடம் கேள்வி ஒன்றை ஆதாரத்துடன் கேட்டார். அதன் விபரங்கள் : ”மதுவுக்கு அடிமையானவர்களின் மீட்சிக்காக தாங்களே உருவாக்கிய அமைப்பின் விழாவில் தான் மது என்கிற அரக்கன் எவ்வாறு தமிழரின் வாழ்வை அழிக்கின்றன […]

Share
செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme