இன்றைய செய்திகள் : நவம்பர் 18, 2017

சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகம் இந்திய – சீன எல்லைப் பாதுகாப்புக் கூட்டம்: இரு நாட்டு அதிகாரிகள் பங்கேற்பு

சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை உறுதி

சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை உறுதி வரி ஏய்ப்பு புகாரில் சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுது செய்து உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. 1994-ம் ஆண்டு லண்டனில் இருந்து லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்துள்ளார். புதிய காரை பழைய கார் என்று கூறி ரூ.1.6 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய செய்திகள் : நவம்பர் 17, 2017

மத்திய அரசின் அச்சகத்தைத் தொடர்ந்து, கோவையில் செயல்படும் மண்டல கடவுச் சீட்டு அலுவலகத்தை (பாஸ்போர்ட் அலுவலகம்) மூட முயற்சி செய்யும் மத்திய அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் தனியார் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் உலகம் அமெரிக்கா – ஜப்பான் கடற்படைகளின் தீவிரப் போர்ப் பயிற்சி பசிபிக் பெருங்கடலில் வியாழக்கிழமை தொடங்கியது.

அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் மு.கருணாநிதியைச் சந்திக்கின்றனர்.

அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் மு.கருணாநிதியைச் சந்திக்கின்றனர். உடல்நலக்குறைவின் காரணமாக ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் மு. கருணாநிதியை அதிமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசுஆகியோர் இன்றிரவு 8 மணிக்கு சந்திக்கவுள்ளனர்.

தினகரன் நாளிதழ் புகைப்படக்காரருக்கு முதல்வர் நிதியுதவி

தினகரன் நாளிதழ் புகைப்படக்காரருக்கு முதல்வர் நிதியுதவி தினகரன் நாளிதழ் புகைப்படக் கலைஞர் ப. மாதவனின் புற்றுநோய்க்கான சிகிச்சை செலவுகளுக்காக பத்திரிகையாளர் மருத்துவச் செலவு நிதியுதவித்திட்டத்திலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ. 3,50,000-க்கான காசோலையை வழங்கினார்.

இன்றைய செய்திகள் : நவம்பர் 16, 2017

ஆய்வுப் பணி மற்ற மாவட்டங்களிலும் தொடரும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். மழையால் வரத்துக் குறைவு: கேரட், பீன்ஸ், அவரை விலை உயர்வு மத்திய அரசு உணவகங்களுக்கு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைத்துள்ளதை அடுத்து புதன்கிழமை முதல் சென்னை நகரில் உள்ள உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்துள்ளன. உலகம் ஜிம்பாப்வே அரசு நிர்வாகத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா […]

நவம்பர் 19 : சேலத்தில் சகாயம் ஐ.ஏ.எஸ். பொதுக்கூட்டம்

வரும் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சகாயம், ஐ.ஏ.எஸ். சேலத்தில் ’நேர்மை ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடமி’யைத் துவக்கி வைக்கிறார். அன்று மாலை 4 மணிக்கு சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கோட்டை மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ‘மக்கள் பாதை’ என்ற அமைப்பின் சார்பில் லஞ்ச ஊழலுக்கு எதிராக நடத்தப்படும் பொதுக்கூட்டம் இது.

டிசம்பர் 2 – உண்ணாவிரதப் போராட்டம் : ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

டிசம்பர் 2 – உண்ணாவிரதப் போராட்டம் : ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு ஊதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காணக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கக் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 2-ம் தேதி (சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக அந்த அமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு மோட்டார் வாகனங்கள் ஓட்டுவோர் கையில் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் அகில இந்திய கூட்டமைப்பு இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இன்றைய செய்திகள் : நவம்பர் 15, 2017

பத்திரப் பதிவில் முறைகேடுகளைக் களைவதற்காக தமிழக அரசு புதிய விசாரணை நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார். கோவையில் இரண்டாவது நாளாக கவர்னர் ஆய்வு 233 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., குறைப்பு; இன்று முதல் அமல் உலகம் இந்தியர்களுக்கான விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

செய்திகள்.in © 2017 *** ஆசிரியர் : மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் *** மின்னஞ்சல் : seythigal at gmail dot com Frontier Theme